பாண்டியனை கேட்காமல் பொண்டாட்டிக்காக சரவணன் எடுத்த முடிவு.. சிக்கித் தவிக்க போகும் மருமகள்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணனை கல்யாணம் பண்ணிட்டு வந்த தங்கமயில் புகுந்த வீட்டில் நல்ல பெயர் எடுப்பதற்காக முயற்சி பண்ணுகிறார். அதற்கு காரணம் பொய்ப் பித்தலாட்டம் பண்ணிய விஷயம் தெரிந்தாலும் தங்க மயிலின் நல்ல குணத்தால் அனைத்தையும் மறந்து மருமகளாக ஏற்க வேண்டும் என்பதற்காக.

ஆனால் அது நல்ல விதமாக தங்கமயில் நடந்து கொண்டால் கூட பரவாயில்லை. ஆனால் அம்மா பேச்சைக் கேட்டு குடும்பத்தில் இருப்பவர்களை பிரிக்க நினைக்கிறார். அத்துடன் ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பிகளின் பாசத்திலும் விரிசல் ஏற்படுத்த தங்கமயிலுக்கு பாக்கியம் தூபம் போடுகிறார். இதையெல்லாம் கேட்டு தலையாட்டிக் கொண்டு தங்கமயில் ஒவ்வொரு விஷயத்திலும் வன்மத்தை காட்டுகிறார்.

மாமியார் வீட்டில் சப்போர்ட் பண்ணும் சரவணன்

அந்த வகையில் எப்பொழுதெல்லாம் மீனா, ராஜீ கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறார்களோ, அவர்களை காயப்படுத்தும் விதமாக திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிட்டு வந்தவர்கள் என்று குத்தி காட்டி பேசுகிறார். இதனால் தங்கமயில் பண்ணும் காரியத்தால் அந்த குடும்பத்தின் சந்தோஷம் நிலைகுலைந்து போகப் போகிறது.

இதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக போகிறது. அதில் சரவணன் மறு வீட்டு பங்க்ஷனாக மாமியார் வீட்டிற்கு போகப் போகிறார். இது தெரிந்த பாக்கியம், தங்க மயிலுக்கு போன் பண்ணி வீட்டிற்கு வரும் பொழுது அனைத்து நகைகளையும் போட்டிட்டு வா. அப்பொழுதுதான் இங்கே வைத்துவிட்டு போனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.

அப்படியே யாராவது கேட்டால் லாக்கர்ல பத்திரமாக இருக்கிறது என்று சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்று ஐடியா கொடுக்கிறார். இதை கேட்ட தங்கமயில் அம்மா வீட்டு விருந்துக்கு போகும் பொழுது கழுத்து நிறைய போலீ நகைகளை போட்டுக் கொண்டார். ஆனால் நாத்தனார் இருந்தா சும்மா விடுவாரா என்ன, அந்த வகையில் தங்க மயிலுக்கு சரியான ஆளு குழலி தான் என்று சொல்வதற்கு ஏற்ப நகை அனைத்தையும் கழட்ட சொல்லிவிட்டார்.

பிறகு ஒரு நகையை மட்டும் போட்டுக்கிட்டு பாக்கியம் வீட்டுக்கு சரவணன் கூட்டிட்டு தங்கமயில் போகிறார். உடனே தங்க மயிலை பார்த்த பாக்கியம் நகையெல்லாம் எங்கே என்று கேட்கிறார். அதற்கு நடந்ததை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கடன் கொடுத்தவர்கள் பாக்கியம் வீட்டில் வந்து பிரச்சினை பண்ணுகிறார்கள்.

இதனை தெரிந்து கொண்ட சரவணன் மருமகனின் கடமையை நிறைவேற்றும் விதமாக நீங்கள் போட்ட நகைகள் அனைத்தையும் அடகு வைத்து கொடுக்க வேண்டிய கடனை அடைத்து விடுங்கள் என்று சொல்கிறார். பொதுவாக பாண்டியனின் மற்ற இரண்டு மகன்கள் அவர்கள் இஷ்டத்துக்கு முடிவெடுத்தாலும், இந்த சரவணன் மட்டும் எதுக்கெடுத்தாலும் அப்பா கிட்ட கேட்டு தான் முடிவெடுப்பார்.

அப்படிப்பட்டவர் கல்யாணம் ஆகி ஒரு நாளிலேயே பொண்டாட்டிக்காக மாமியார் வீட்டுக்கு சப்போர்ட்டாக நின்று விட்டார். ஆனால் இந்த ஒரு விஷயத்தால் கூடிய சீக்கிரம் தங்கமயில் நாத்தனாரிடம் மாட்டிக் கொண்டு சிக்க போகிறார். இருந்தாலும் இந்த பாக்கியம் மற்றும் தங்கமயில் பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து அனைவரையும் அடக்கி விடுவார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -