வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பாண்டியன் மருமகளுக்கு சவுக்கடி கொடுத்த சரவணன்.. மொத்த கோபத்தையும் பாக்கியத்திடம் கொட்டி தீர்த்த தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் மற்றும் தங்கமயில் தன்னிடம் உண்மையை மறைத்து விட்டார்கள் என்ற ஆதங்கத்தில் பாண்டியன் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் வட்டமேசை மாநாடை நடத்தி ஒரு குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும். செலவுகளை சிக்கனமாக செய்து நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து அனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் தங்கமயில் மட்டும் வராமல் ரூம்குள்ளே இருந்து புலம்புகிறார். பிறகு ஒவ்வொருவரும் பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள். அப்பொழுது மீனா மற்றும் ராஜி, தங்கமயில் அக்கா சாப்பிட வரவில்லை. நாங்க போய் கூப்பிட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள். அதற்கு பாண்டியன் தினமும் நீங்கள் கூப்பிட்டு தான் அந்த பிள்ளை சாப்பிட வந்தது.

தங்கமயிலுக்கு தரமான சம்பவத்தை செய்த சரவணன்

அந்த பிள்ளைக்கு பசித்தால் வந்து சாப்பிட்டுக்கும், நீங்கள் உங்க வேலையை பாருங்கள் என்று பாண்டியன் சொல்லிவிடுகிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தங்கமயில் மாமா ரொம்ப நம்ம மீது கோபமாக இருக்கிறார் என்று வருத்தப்படுகிறார். ஆனாலும் சரவணன் மாமா கூட நம்மளை சாப்பிட கூப்பிடவில்லை என்று ஃபீல் பண்ணுகிறார். பிறகு அனைவரும் சாப்பிட்டு முடித்த நிலையில் ராஜி மற்றும் மீனா தங்கமயிலை சாப்பிட கூப்பிடுகிறார்கள்.

ஆனால் தங்கமயில் வரவே மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிவிடுகிறார். அடுத்ததாக பாக்கியம், தங்கமயிலுக்கு போன் பண்ணுகிறார். உடனே தங்கமயில் எல்லாம் உன்னால தான் வந்தது. எவ்வளவு பிரச்சனை நடந்தாலும் நீ ஏன் இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறாய். நீ என்ன வேணாலும் பண்ணிட்டு அங்க பேசாமல் இருக்கிறாய். ஒவ்வொரு பிரச்சனையும் அவமானத்தையும் நான் தான் இங்கே சந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று நடந்த விஷயத்தை சொல்கிறார்.

உடனே பாக்கியம் இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று சொல்கிறார். இதை கேட்டதும் தங்கமயில் தயவு செய்து நீ ஏதாவது சொல்லி என்ன மறுபடியும் பிரச்சனையில் மாட்டி விடாதே, நான் உன் பேச்சைக் கேட்பதாக இல்லை. நீயும் தயவு செய்து எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்று போனை கட் பண்ணி விடுகிறார். அடுத்ததாக ராஜி மற்றும் மீனா சாப்பிட்டு முடித்த நிலையில் ஒவ்வொருவரும் தூங்க போய் விடுகிறார்கள்.

அப்பொழுது மீனா, சரவணனிடம் தங்கமயில் அக்கா சாப்பிட வரவும் இல்லை கூப்பிட்டாலும் சாப்பிட மாட்டாங்க. நீங்க போய் சாப்பிட கூட்டிட்டு வாங்க என்று சொல்கிறார். அதற்கு சரவணன், காரணமே இல்லாமல் கோபப்பட்டு அவ உட்கார்ந்துட்டு இருக்கா. அவ கிட்ட போய் என்ன கெஞ்ச சொல்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு மீனா நீங்க கெஞ்சலாம் வேண்டாம்.

நான் டிபன் போட்டு கொடுக்கிறேன் நீங்கள் அதை கொண்டுட்டு போய் மட்டும் கொடுங்கள் என்று சரவணனிடம் சாப்பாடு கொடுத்து விடுகிறார். சரவணன் அதை ரூம்குள் கொண்டு போய் அங்கே இருக்கும் டேபிளில் வைத்து தங்கமயில் எழுந்து இந்த சாப்பாட்டை சாப்பிடு என்று சொல்லி வெளியே போய் விடுகிறார். உடனே தங்கமயில் இன்னும் இரண்டு மூன்று தடவை கூப்பிட்டு சாப்பிட வைக்கலாம் என்று புலம்புகிறார்.

அதற்குள் திரும்பி வந்த சரவணன், சாப்பாட்டை பார்த்து இன்னும் நீ சாப்பிட வில்லையா? உனக்கு சாப்பாடு வேண்டாமா என்று சொல்லி அந்த சாப்பாட்டு தட்டை அடுப்பாங்கரைக்கு எடுத்துவிட்டு போகிறார். இதை பார்த்த தங்கமயில் என்ன மாமா சாப்பாடு கொண்டுட்டு போகிறார் என்று பின்னாடியே போய் பார்க்கிறார். அங்க போய் பார்த்தா அடுப்பாங்கரையில் சரவணன் அந்த தட்டில் இருக்கும் சாப்பாட்டை எடுத்து சாப்பிடுகிறார்.

அந்த வகையில் தங்கமயிலுக்கு எதிரியாக அந்த வீட்டில் யார் இருக்காங்க இல்லையோ இந்த சரவணன் போதும். அந்த அளவிற்கு தங்கமயிலுக்கு சவுக்கடி கொடுத்து வருகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத தங்கமயில் அதிர்ச்சியாய் நின்று பார்க்கிறார். ஆனால் இப்படிப்பட்ட தங்கமயிலின் கேரக்டருக்கு இந்த மாதிரி ஒரு சரவணன் தேவைதான் என்பதற்கு ஏற்ப சம்பவத்தை செய்து விட்டார்.

- Advertisement -

Trending News