விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற பிரபலமான தொடரில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ரக்ஷிதா.
இவர் சீரியலில் நடித்துக் கொண்டே வெள்ளித்திரையிலும் 2015ஆம் ஆண்டு வெளியான உப்புக்கருவாடு படத்திலும், அதே ஆண்டு கன்னடத்தில் வெளியான பாரிஜாதம் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இருப்பினும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெள்ளித்திரையில் பிரபலமாக முடியாததாலும் , அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததாலும் மீண்டும் சீரியல்களில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் ரக்ஷிதா, சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். இதற்கு காரணம் இவர் நடிக்கும் சீரியல்களில் எல்லாம் தனக்கென்றே தனித்துவமான அசத்தலான நடிப்பினை வெளிக்காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.
அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் அனைத்து சீரியல்களிலும், குடும்பப்பாங்கான பெண்ணாகவே காட்சியளிக்கும் ரக்ஷிதா, தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கா மாடர்ன் ஆக மாறிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கண்ணிமைக்காமல் பார்க்க வைத்துள்ளார்.
மேலும் இந்த புகைப்படங்களில் ரக்ஷிதா குட்டி டவுசரில் க்யூட்டாக இருப்பதால் அவருடைய ரசிகர்களால், இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.