புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலத்திற்கு வந்த சோதனை.. முதல்வரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை!

தமிழ் சினிமாவில் நரசிம்மா, தமிழன், நிழல்கள் போன்ற பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, தென்றல் தற்போது ஓடிக் கொண்டிருக்கக் கூடிய சத்யா என்ற நாடகத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்தவர் நான் ராஜசேகர். இவர் 2019ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரின் மனைவி தாரா ராஜசேகர்.

திரையுலகில் கதை எழுத்தராகவும், ஒளிப்பதிவாளராகவும் அத்துடன் நடிகருமாக பணியாற்றியுள்ளார். மக்கள் மத்தியில் பிரபலம் பெற்ற இவர் தனக்கென ஒரு சொந்த வீடுகூட இல்லாமல், இறப்பதற்கு முன்பாக லோன் வாங்கி வீடு வாங்கியுள்ளார். அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் பண்ணுவதற்கு முன் இவர் இறந்துவிட்டார். இவரின் இறுதி சடங்குகளை செய்வதற்கு கூட தாரா ராஜசேகரிடம் பணம் இல்லையாம். அப்போதுகூட பிறரிடம் கையேந்தி இவருக்கான காரியங்களை செய்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் கிடைத்த வருமானத்தை வைத்து இவரது தங்கை நிரஞ்சனாவை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வளர்ப்பு மகளின், மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அதிக அளவில் செலவு செய்துள்ளார். தனக்கென்று சிறிய தொகையை கூட ஓதுக்கி வைத்துக் கொள்ளவில்லை. காலம் போன கடைசியில் தன் மனைவிக்கு வாழ்வதற்கு வீடு வேண்டும் என்று லோன் போட்டு வீடு வாங்கியுள்ளார். இவர்களுக்கு வாரிசு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

rajasekar-cinemapettai
rajasekar-cinemapettai

தற்போது வங்கியின் நெருக்கடி காரணத்தினால் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி நிற்பதாக தாரா ராஜசேகர் கதறி அழுகிறார். திரை உலகத்தில் இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் தங்களின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு என்று கூறுகிறார். திரை உலகம் சார்ந்த அனைத்து சங்கங்களிலும் ஏறி இறங்கிய போது கூட ஒரு உதவியும் கிடைக்க பெறவில்ல.

இவரின் குரலை கேட்க கூட ஆள் இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். வயது முதிர்ந்த காலத்தில் இவருக்கு யோசிக்காமல் வங்கியானது கடன் வழங்கிவிட்டது. தற்போது என்னிடம் வந்த கடனை கட்டும்படி நெருக்கடி கொடுத்து வருகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

திரை உலகத்தில் இருக்கக்கூடிய யாராவது தனக்கு விதவை பென்ஷனாவது வாங்கித் தந்து உதவுமாறு வேண்டி கேட்டுள்ளார். மேலும் தற்போது லோன் போட்டு வாங்கிய அந்த வீட்டை தனது கணவர் இறுதியாக நடித்த சத்யா என்ற நாடகத்தின் தயாரிப்பாளருக்கே வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும், தான் ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு தங்கி உள்ளதாகவும், அந்த தயாரிப்பாளர் தரும் பணத்தில் வாடகைக் போக இதர தொகை தனது வயிற்றுப் பிழைப்புக்கு ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதலமைச்சருக்கு தனது கோரிக்கையை மனுவாக அளிக்கலாம் என்று நினைத்தாலும் மனு எழுதி தருவதற்கு கூட ஆள் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் தனது கோரிக்கையை ஏற்று தனது கடன்களுக்கு ஒரு தீர்வு வழங்கும்படி வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News