சேரனுக்கு டாட்டா போட்ட சரத்குமார்.. ரீ என்ட்ரியில் மிஸ்டர் மெட்ராஸின் வாய்ப்பை பிடித்த மதுரை மச்சான்

Cheran is going to direct the biopic of Dr Ramadoss: தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட அளவில் பயோபிக் படங்கள் வெளிவந்திருந்தாலும் ஒரு சிலவே வெற்றியடைகின்றன. இருந்தாலும் முன்னணி இயக்குனர்கள் மனம் தளராது தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் பெரியார், காமராஜர், ஜெயலலிதா அவர்களின் வரிசையில் தற்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களை பற்றிய பயோபிக் படம் ரெடியாக உள்ளது.

ஒரு சில ஆண்டுகள் தமிழ் சினிமா பக்கம் வராது இடைவேளை எடுத்து யோசித்துக் கொண்டிருந்த சேரன் அவர்களுக்கு பிக்பாஸ் ஒரு புதிய மாற்றத்தை தந்தது எனலாம். மேலும் அவர் கடைசியாக நடித்த தமிழ் குடிமகன் திரைப்படமும் விமர்சனரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து ஜர்னி என்ற பீல்குட் வெப் சீரிஸ் இயக்கினார். சரத்குமார், பிக்பாஸ் புகழ் ஆரி, கலையரசன் ஆகியோர் நடித்திருந்த இந்த வெப் சீரிஸ் ஆபாசமற்ற முறையில் எதார்த்தமாக அமைந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

Also Read: இதுவரை தமிழில் வந்து மொக்கை வாங்கிய 5 பயோபிக்.. சேரன் அருண்மாதேஸ்வரன் எடுக்கும் வாழ்க்கை வரலாறு

வெப் சீரிஸ்சை தொடர்ந்து சேரன் ஒரு பயோபிக் படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தது. அரசியல் தலைவரும் பாமக நிறுவனமான டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப் போகிறார். அதில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்ற சரத்குமார் நடிக்கப் போவதாக செய்திகள் பரவின.

டாக்டர் ராமதாஸின் இளமைக்காலம், அவர் டாக்டராக பணிபுரிந்தது, மக்களுக்கு அவர் செய்த தொண்டு, அவரின் அரசியல் நுழைவு என பகுதிவாரியாக உருவாக்குவதாக கூறப்பட்டது. இதனால் அவரது தொண்டர்கள் இப்படத்தை பற்றி பெரிதும் எதிர்பார்த்த நிலையில் தேர்தலை காரணம் காட்டி திடீரென சரத்குமார் இதிலிருந்து விலகுவதாக கூறப்படுகிறது.

பாமக மூத்த தலைவர்களில் ஒருவரான ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன், லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒருவராக இருப்பதால் அவரே இப்படத்தை தயாரிக்கஉள்ளதாக தகவல் .

மேலும் சரத்குமார் விலகியதால் ராமதாஸ் கேரக்டருக்கு பிரகாஷ்ராஜை சிபாரிசு செய்தனராம் தயாரிப்புக் குழு. தமிழில் ரீஎன்ட்ரிக்காக காத்திருக்கும் மதுரை மச்சான் உடனே ஓகே சொல்லிவிட விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: சேரன் செய்த தரமான சம்பவம்.. லோகேஷ், நெல்சன்லாம் அவர் கிட்ட கத்துக்கோங்க பாஸ்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்