இதுவரை பயோபிக் எடுக்கிறேன்னு மொக்கை வாங்கிய 5 படங்கள்.. சேரன், அருண் மாதேஸ்வரன் எடுக்கும் வாழ்க்கை வரலாறு

Biographical films of leaders released in Tamil cinema: தமிழ் சினிமாவின் காதல் ஆக்சன் த்ரில்லர் மூவிகளுக்கு மத்தியில் இடையிடையே பெரியவர்களின் சில வாழ்க்கை வரலாற்று படங்களும் வெளிவருவதுண்டு. பொது வாழ்வில் சந்தித்த பிரச்சனைகளை நடைமுறையில் காணும் போது அந்த தாக்கத்தை ரசிகனுக்குள் ஏற்படுத்த தவறி தோல்வியாகும்கதை தொடர்கதை ஆகிறது அவ்வாறு எடுக்கப்பட்ட 6 வாழ்க்கை வரலாற்று படங்களை காணலாம்.

பெரியார்: திராவிட கழகத்தின் முன்னோடியான ஈ வே ராமசாமி அவர்களின் கதையை படமாக்க முயன்ற போது பெரியார் கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும் தமிழ் சினிமாவின் தன்மான சிங்கம் சத்யராஜ்  விருப்பத்துடன் இந்த கதாபாத்திரத்தை ஏற்றார் எனலாம். பல சர்ச்சைகளுக்கு பின் வெளியான பெரியார் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

நடிகையர்  திலகம்:ஆயிரத்தில் ஒருத்தியம்மா என புகழப்பட்ட  நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு  படமாக எடுக்கப்பட்டது. இயக்குனர் நாக அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவான இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகமாக மாறி இருந்தார். இருந்த போதும் இவரின் கருப்பு பக்கங்களை தெளிவாக காட்டாமல் போனதால் சாவித்திரியின்  துயரங்கள் ரசிகர்களின் மனதில் பதியாமல் போயின.

Also read: அங்கங்களால் பெயர் வாங்கி மவுசு அதிகரித்த 6 நடிகைகள்.. மீனா போல் கண்களால் கிரங்கடித்த 2 ஹீரோயின்ஸ்

தலைவி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதத்தை ஏஎல் விஜய் அவர்கள் படமாக்கி இருந்தார். அரவிந்த்சாமி, கங்கனா ரானாவத் போன்றோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜெயலலிதாவின்  திரை மற்றும் அரசியல் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய தலைவியை அவரது தொண்டர்கள்  கொண்டாடினர்.

காமராஜ்:  இந்திய அரசியலிலும், தமிழக மக்களின் மேம்பாட்டிலும் பெரும்பங்கு வகித்த காமராஜர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுத்த போது காமராஜரின் தியாகங்களும் கடின உழைப்பும், மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டும் கண்முன் நிறுத்தின என்றாலும் குரலை கேட்கும் போது எம் எஸ் பாஸ்கர் நினைவே நமக்கு வந்தது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் அமைதியாக வந்த, இந்த காமராஜரான ரிச்சர்ட் மதுரம், மக்களின் மனதை தொட முடியாமல் போனார்

ராமானுஜம்: ஆங்கிலேயரை அசர வைத்த இந்திய கணிதவியலாளர் ராமானுஜனின் வாழ்க்கை தத்துவத்தை படமாக்க முற்பட்டார் ஞானராஜசேகரன். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளியான திரைப்படம் தமிழ் மாநில விருதை வென்றது. ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான பிக் பாஸ் புகழ் அபினய் இதில் ராமானுஜனாக நடித்திருந்தார்.

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்: திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மாதவன். தேசத்துரோக பழியில் இருந்து நம்பி நாராயணன் எவ்வாறு மீண்டார் என்பதை ரத்ரூபமாக காட்சிகளின் வழியே ரசிகர்களுக்கு கடத்தி இருந்த மாதவனுக்கு சபாஷ் போட்டே தீர வேண்டும் முடிந்த அளவு அறிவியல் காட்சிகளை அற்புதமாக காட்சிப்படுத்தியிருந்தார் இப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் மாதவன்.

சமீபத்தில் ஒரு வதந்தியாக சேரன் அவர்கள் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப் போவதாகவும் அதற்கு சரத்குமார் நடிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது இதை முற்றிலும் மறுத்தார் சேரன். மேலும் கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஈழத் தமிழர்கள் பற்றிய கதையாக கேப்டன் மில்லரை எடுக்க நினைத்தாராம் அதுவும் பல்வேறு சிக்கலை உண்டாக்கும் என்ற காரணத்தினால் சுதந்திரத்திற்கு முன் என மாற்றி இப்படத்தின் கதையை வடிவமைத்தார் என்பது தகவல்.

Also read: விஜய் மிஸ் பண்ணி பிரம்மாண்ட வெற்றி கிடைத்த 5 படங்கள்.. அஜித்துக்கு அந்தஸ்தை வாங்கி கொடுத்த தளபதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்