விஷாலுக்கு முன்பே ஏற்பட்ட காதல், பழி வாங்கிய சரத்.. தாய்லாந்தில் நடந்தது என்ன? வெளிவந்த சீக்ரெட்!

Varalakshmi: தற்போது வரலட்சுமி, நிக்கோலாய் திருமண செய்திகள் தான் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. மும்பையில் மிகப்பெரிய ஆர்ட் கேலரி வைத்திருக்கும் தொழிலதிபரை சரத்குமார் தன்னுடைய மாப்பிள்ளையாக்கி இருக்கிறார்.

ஏகப்பட்ட சொத்துக்களை வைத்திருக்கும் பணக்காரரை வரலட்சுமி எப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. உண்மையில் நிக்கோலாய் சரத்குமார் குடும்பத்தின் நெடுங்கால நண்பராக இருந்திருக்கிறார்.

அதுதான் இந்த காதல் திருமணத்திற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பே வரலட்சுமி விஷாலை காதலித்தது அனைவருக்கும் தெரியும் . அந்த காதல் முறிவுக்கு பின் மிகப்பெரும் ஃபிளாஷ்பேக் ஒன்று இருக்கிறது.

அதாவது சரத்குமாரை பழிவாங்க தான் விஷால் வரலட்சுமியை காதல் செய்வது போல் நடித்து இருக்கிறார். நடந்தது என்னவென்றால் விஷாலின் அப்பா தயாரிப்பில் சரத்குமார் நடித்திருக்கிறார். ஆனால் அப்போது சரிவர படப்பிடிப்புக்கு வராமல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டாராம்.

இதனால் விஷாலின் அப்பா தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அதற்கு பழி வாங்க தான் விஷால் இப்படி ஒரு வேலையை பார்த்து இருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் விஷாலை காதலிப்பதற்கு முன்பே வரலட்சுமி நிக்கோலாய் இருவருக்கும் மெல்லிய காதல் இருந்திருக்கிறது.

மகள் திருமணத்தை தாய்லாந்தில் நடத்திய சரத்

ஆனால் என்ன நடந்ததோ அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதுவும் விவாகரத்தில் முடிந்துவிட்டது. அப்போது வரலட்சுமி காதல் தோல்வியில் இருந்திருக்கிறார். பிறகுதான் இந்த ஜோடி திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர்.

இதில் சரத்குமார் விஷாலை பழி வாங்குவதற்காகவே தாய்லாந்தில் தன்மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி இருக்கிறார். இது ஒரு காரணமாக இருந்தாலும் அந்த நாட்டில் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது.

மது மாது என நன்றாக என்ஜாய் செய்யலாம். அதனாலேயே இப்படி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து திருமணத்தை நடத்தியதாக பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தியாவில் திருமணம் நடப்பதில் ஏதாவது சட்ட சிக்கல் இருந்திருக்கலாம் என டாக்டர் காந்தராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில் திருமணம் தாய்லாந்தில் நடைபெறவில்லை. சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தான் நடைபெற்றது. இதற்கு சரத்குமாரின் மனைவி சாயா தேவியும் வரவில்லை என பகீர் கிளப்பியுள்ளார்.

இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் வரலட்சுமியின் ரிசப்ஷன் போட்டோக்கள் தான் வெளிவந்தது. திருமண புகைப்படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அதனால் இந்த திருமண விவகாரத்தில் உண்மை என்ன என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் இந்த திருமணம் நடப்பதற்கு முன் வரலட்சுமி வாழ்வில் விஷாலால் என்னென்ன குளறுபடிகள் வந்தது என பாண்டியன் வெளிப்படையாக தெரிவித்திருப்பது புது தகவலாக உள்ளது.

வரலட்சுமியின் திருமணத்தில் இவ்வளவு சர்ச்சைகளா.!

Next Story

- Advertisement -