நயன்தாராவின் ரகசியத்தை உடைத்த சரண்யா பொன்வண்ணன்.. லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இதுதான் நிலைமை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றினாலும் அதற்கான அங்கீகாரம் சில வருடங்களுக்கு முன்பு தான் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் அவர் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காதது இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

அந்த தோல்விகளில் இருந்து சுதாரித்துக்கொண்ட நயன்தாரா நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நயன்தாராவை பற்றி நிறைய சர்ச்சைகள் வந்துள்ளது.

அதாவது நயன்தாரா எல்லாவற்றையும் எளிதில் நம்ப கூடியவர் என்றும் அதனால் தான் இவருக்கு இவ்வளவு பிரச்சனை வருகிறது என்று பல பிரபலங்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். அந்த வகையில் தற்போது சரண்யா பொன்வண்ணன் நயன்தாராவை பற்றி ஒரு பேட்டியில் சில விஷயங்களைக் கூறியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தார். அதாவது சரண்யா அந்த பேட்டியில் கூறுகையில் நயன்தாரா யாருடனாவது பேசாமல் இருந்தால் அவர் மிகவும் மோசமான ஆளாக இருக்கக்கூடியவர்.

ஏனென்றால் நயன்தாரா தனக்கு உண்மையாக இருக்கக் கூடியவர். அதனால் தன்னை யாராவது துன்புறுத்தினால் உடனே ஒதுங்கி விடுவார். சினிமாவில் இவ்வளவு உயரத்தில் இருக்கும் நயன்தாரா தனக்குப் பிரச்சினை செய்பவர்களிடம் ஒதுங்கி இருப்பதை பார்த்த பிரம்மிப்பாக இருப்பதாக சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ளார்.

பேசுபவர்கள் அப்படி தான் பேசிக்கொண்டே இருப்பார்கள், அவர்களை என்னால் சமாளிக்க முடியாது என நயன்தாரா எதையும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுவாராம். இந்த குணத்தால் தான் நயன்தாரா இவ்வளவு சர்ச்சையில் சிக்கியும் தற்போதும் லேடி சூப்பர் ஸ்டாராக நிலைத்து நிற்கிறார்.

Next Story

- Advertisement -