தளபதியின் உயிர் நண்பனை ஏமாற்றிய ரசிகர்கள்.. பிக்பாஸில் நடந்த ட்விஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று தெரிந்துவிடும்.

இந்நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக வருண் மற்றும் அக்ஷரா இருவரும் எலிமினேட் ஆகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அதன்பிறகு பிக்பாஸ் வீட்டில் நடந்த பல கடுமையான டாஸ்க்கில் அமீர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் நபராக சென்றார்.

அவரைத் தொடர்ந்து மீதமிருக்கும் ஏழு பேரில் யார் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக சஞ்சீவ் குறைவான ஓட்டுக்களை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒயில்டு கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்தார். இந்த சீசனில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக அவர் இருந்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இவரின் இயல்பான நடவடிக்கைகள் ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்தது.

இதனால் அவர் நிச்சயம் இறுதிப்போட்டி வரை செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். தளபதி விஜய் ரசிகர்களின் ஓட்டும் அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ஏமாற்றம் தரும் விதமாக குறைவான ஓட்டுகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்கள் வெளியேறும் போது அங்கு உள்ள மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அவர்களுக்கு கண்ணீருடன் விடை கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். ஆனால் நேற்று சஞ்சீவ் வெளியேறும் பொழுது அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை அனுப்பி வைத்தனர்.

சஞ்சீவ் முகத்தில் சற்று ஏமாற்றம் தெரிந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவரும் அனைவருடன் கலகலப்பாக பேசி அங்கிருந்து விடைபெற்றார். பின்னர் நடிகர் கமல்ஹாசனிடம் மேடையில் பேசிய சஞ்சீவ் அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும் விரைவில் திரைப்படங்களில் நடிக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட சஞ்சீவ், அகம் டிவி வழியாக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் சில வார்த்தைகளை பேசி பிரியாவிடை பெற்றார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை