இனி உங்களை எப்போது ஹீரோயினாக பார்க்கப் போகிறோம்.. 3 படங்களில் தங்கையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் படங்கள் ஆரம்பத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், இடையில் சில படங்கள் தோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் தான் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி படத்தில் நடிக்க கீர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே தமிழ் சினிமாவில் நீடிக்க முடியும் என்பதை உணர்ந்த கீர்த்தி சுரேஷ் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். அதன் பலனாக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது. அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவரின் மார்க்கெட் உச்சத்தை தொட்டது.

தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தங்கை கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் அஜித் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி அஜித் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளாராம். இத்துடன் முடிந்து விடவில்லை. மூன்றாவதாக இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாணிக்காயிதம் படத்திலும் செல்வராகவனுக்கு தங்கையாகவே கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

saani-kayidham-selvaragavan
saani-kayidham-selvaragavan

மேலும் இப்படத்தில் நான்கு நிமிடம் இடம் பெற்றுள்ள செண்டிமெண்ட் காட்சி ஒன்றில் கிளிசரின் இல்லாமலேயே கண்களில் கண்ணீரை வரவழைத்து கீர்த்தி சுரேஷ் நடித்ததாக தகவல் கசிந்துள்ளது. இந்த காட்சி திரையில் பார்க்கும்போது ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் வருவது உறுதி என கூறுகிறார்கள். அதெல்லாம் சரிதான். முன்னணி நடிகையாக இருக்கும் சமயத்தில் இவ்வாறு தொடர்ந்து மூன்று படங்களில் தங்கையாக நடித்தால் இவரது மார்க்கெட் குறைந்து விடாதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -