ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜய்யின் வலதுகை மீது கடும் கோபத்தில் இருக்கும் சங்கீதா.. எல்லா பிரச்சனைக்கும் காரணம் அவர் தான்

Actor Vijay: கடந்த சில மாதங்களாகவே மிகப்பெரிய பேசுபொருளாக மாறிய விஷயம் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் பிரிந்து இருப்பதாக உள்ள தகவல்தான். இதற்கு காரணம் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் என்று ஒரு செய்தி பரவியது. இந்த சூழலில் விஜய்யின் வலது கை மீது சங்கீதா கடும் கோபத்தில் இருப்பதாக பயில்வான் கூறியிருக்கிறார்.

சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் தற்போது தனது யூடியூப் சேனலில் விஜய்யை பற்றி நிறைய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் முக்கியமாக விஜய்யின் மனைவி சங்கீதா பற்றியும் கூறியிருக்கிறார். தளபதியின் தீவிர ரசிகராக இருந்து அதன் பின் அவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார் சங்கீதா.

Also Read : லியோவுக்காக தீயாக வேலை செய்யும் விஜய்.. ஜவான் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்

இந்நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து விஜய்யின் படங்களில் கதாநாயகியை தேர்ந்தெடுப்பது சங்கீதா தான். இதை தளபதியே பலமுறை மேடையில் சொல்லி இருக்கிறார். ஆனால் சமீப காலமாக சங்கீதாவின் பேச்சை விஜய் கேட்பதில்லையாம். தன்னுடைய படத்தின் கதாநாயகியை தானே தான் தேர்ந்தெடுத்து வருகிறாராம்.

இதற்கெல்லாம் காரணம் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் என்று பயில்வான் கூறியிருக்கிறார். தளபதியின் வலது கையாக செயல்படும் ஜெகதீஷை பார்த்தால் சங்கீதாவுக்கு சுத்தமாக பிடிக்காதாம். ஏனென்றால் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இவர்தான் மேனேஜராக செயல்பட்டு வருகிறாராம்.

Also Read : விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நிறுவனம்.. காற்றில் பறந்த வாக்குறுதி, வாய்க்கு பூட்டு போட்ட கமல், ரஜினி, விஜய், சூர்யா

மேலும் விஜய்யின் மூலமாக கீர்த்தி சுரேஷ்க்கு நிறைய பட வாய்ப்புகள் போவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு விஜய் தனது பேச்சை கேட்காமல் ஜெகதீஷ் அறிவுரைப்படி செல்வதால் சங்கீதா அவரைக் கண்டாலே எரிச்சல் அடைந்து உள்ளார். இதனால் தான் அவர் வெளிநாட்டுக்கு சென்றார் என்றும் கூறப்பட்டு வந்தது.

ஆனாலும் விஜய் தனது மேனேஜர் ஜெகதீஷ்க்கு முக்கிய இடம் கொடுத்து தற்போது வரை தனது பக்கத்திலேயே வைத்திருக்கிறார். அதேபோல் தான் விஜய் மக்கள் மன்ற பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் சங்கீதா, ஜேசன் சஞ்சய் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் ஆகியோருக்கு பிடிக்கவில்லை என பயில்வான் கூறி இருக்கிறார்.

Also Read : இந்தியளவில் ட்ரெண்டாகும் ஆபரேஷன் விஜய்.. நம்ம தளபதின்னு போய் பார்த்தா இது வேற மாதிரி புல்லரிக்க வைக்குதே

- Advertisement -

Trending News