விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் சம்யுக்தா. ஆனால் இவர் ஏற்கனவே மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளார். இருப்பினும் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காததால் விஜய் டிவி அழைத்தவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் இவர் செய்த சேட்டைகளை சில தகாத வார்த்தைகளாலும் ரசிகர்களிடம் ஆதரவு குறைய தொடங்கியது. அதன் பிறகு இவர் ஒரு சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியான ஒரு சில நாட்களிலேயே விஜய்சேதுபதி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனை அவரே வெகுவிமர்சையாக சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். இருப்பினும் இவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் வரவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கூறிவந்தனர்.
அதனால் தற்போது சம்யுக்தா நடிகைகள் பின்பற்றும் வித்தையை இவரும் பின்பற்றத் தொடங்கியுள்ளார். அதாவது சமூக வலைதள பக்கத்தில் நடிகைகள் எப்போதும் பட வாய்ப்பு குறையத் தொடங்கினால் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வார்கள். தற்போது அந்த ரூட்டை தான் சம்யுக்தா பாலோ செய்து வருகிறார்.
தற்போது சம்யுக்தா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சேலையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சம்யுக்தா அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.