விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் சமீரா ஷெரீஃப். அதற்குப் பின்னர் ஜீ தமிழில் ரெக்க கட்டி பறக்குது மனசு என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
விஜய் டிவியின் மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை சீசன் 2 போட்டிகளில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சமீபத்தில் கர்ப்பமான சமீரா ஷெரீஃப் டான்ஸ் ஆடுவது, கிரிக்கெட் விளையாடுவது என தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சமீரா என் குழந்தை, எனக்கு பார்த்துக்கொள்ள தெரியும், நீங்கள் எனக்கு பாடம் எடுக்காதீர்கள் என்பது போன்று கோபமாக பதில் அளித்துள்ளார். உங்க மேல உள்ள அக்கரையில் தான் ரசிகர் கூறினார், இப்படியா திட்டுவது என கேட்டதற்கு.
என்னை பற்றி அக்கறையுடன் பேசுபவர்களை நான் எதுவும் சொல்லவில்லை மிகவும் திமிராக என்னிடம் பதில் கொடுப்பவர்களுக்கு மட்டுமே நான் பதிலடி கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இப்படி ரசிகர்கள் அக்கரையில் பேசினால் கூட அது சர்ச்சையில் தான் போய் முடிகிறது.