நடிகையுடன் டேட்டிங்கில் நாக சைதன்யா.. கோபத்தின் உச்சியில் சமந்தா போட்ட டிவிட்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நன்றாக சென்று கொண்டு இருந்த இவர்களின் திருமண வாழ்வு சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இவர்கள் இருவரும் மனமொத்து பிரிய போவதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும் சம்பந்தப்பட்ட இருவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

அந்த வகையில் சமந்தா தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நாக சைதன்யாவின் ரசிகர்கள் சமந்தா குறித்து பல மோசமான கருத்துகளை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர். இருப்பினும் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வந்தார்.

ஆனால் இப்போது நடந்துள்ள ஒரு விஷயத்தால் அவர் சோசியல் மீடியாவில் பொங்கி எழுந்துள்ளார். அதாவது கடந்த சில நாட்களாக நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றித் திரிவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இதை பார்த்த நாக சைதன்யாவின் ரசிகர்கள் இப்படி ஒரு வதந்தியை பரவ விட்டது சமந்தாவின் பி ஆர் டீம் தான் என்று கூறி வருகின்றனர். இதனால் சமந்தா தற்போது உச்ச கட்ட கடுப்பில் இருக்கிறார். அதன் விளைவாக அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு டிவீட் ஒன்றை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது ஒரு பெண்ணை பற்றிய வதந்தி வந்தால் அதை அப்படியே உண்மை என்று நம்புகிறோம். அதுவே ஒரு ஆணைப் பற்றிய வதந்தி வந்தால் அதற்கு காரணம் பாதிக்கப்பட்ட பெண் தான் என்று எப்படி உங்களால் பேச முடிகிறது என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் நாக சைதன்யாவின் ரசிகர்கள் இந்த விவகாரத்தை இன்னும் பெரிதுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

samantha
samantha

Next Story

- Advertisement -