நான் நடிக்கலானாலும் எந்த கஷ்டமும் இல்லை.. சம்பாதித்த பணத்தில் சமந்தா நடத்தி வரும் தொழில்கள்

Actress Samantha: சென்னையில் பல்லாவரத்தில் பிறந்த சமந்தா மாடலிங் துறையை தான் முதலில் தேர்ந்தெடுத்தது. அதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து அடுத்தடுத்து தன்னுடைய கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர். மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தவர், தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ஒரு சில விஷயங்கள் ஒத்துப் போகாத காரணத்தால் அந்த உறவு விவாகரத்தில் முடிந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் முழுமூச்சுடன் சமந்தா நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் அவருக்கு மையோசைட்டிஸ் என்னும் தோல் அழற்சி நோய் வந்தது. நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதால் அவர் சிகிச்சைக்காக பிரேக் எடுத்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

Also Read:கம்பேக்-னா இப்படி இருக்கணும்.. இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் புகைப்படம்

சமந்தா நோயின் காரணமாக சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றால் அவருடைய பொருளாதாரத்திற்கு என்ன செய்வார் என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருக்கலாம். ஆனால் அவர் தன்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முன்னதாகவே நிறைய தொழில்களில் முதலீடு செய்து இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது.

சமந்தா நடத்தி வரும் தொழில்கள்

நடிகை சமந்தா மிஸ் வேல்டு போட்டியில் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆன சுஸ்ருதி கண்ணன் என்பவர் உடன் இணைந்து முதலில் ஆரம்பித்த தொழில் தான் சாகி. இந்த ஆடை வடிவமைப்பு தொழிலை கடந்த 2020 ஆம் ஆண்டு சமந்தா ஆரம்பித்தார். கிட்டத்தட்ட வருடத்திற்கு இரண்டு இலக்கத்தில் கோடிக்கணக்கில் இந்த தொழில் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த சாகி நிறுவனம் கிட்டத்தட்ட 15 நாடுகளுக்கு தங்களுடைய ஆடை ஏற்றுமதியை சிறப்பாக செய்து வருகிறது.

மேலும் சமந்தா தன்னுடைய தோழி ஷில்பா என்பவருடன் இணைந்து சஸ்டைன் கார்ட் என்னும் தொழிலையும் தொடங்கி இருக்கிறார். ஆன்லைன் மூலம் இயற்கையான முறையில் தயாரிக்கும் பொருள்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்களை இந்த நிறுவனம் டெலிவரி செய்து வருகிறது. இதன் மூலமும் நடிகை சமந்தாவுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது.

இந்த தொழில்கள் மட்டும் இல்லாமல் சமந்தா மழலையர் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். நன்றாக இருக்கும் காலகட்டத்திலேயே அவர் சம்பாதித்த பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து வைத்ததால், இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டாலும் பொருளாதார ரீதியாக எந்த கஷ்டத்தையும் அவர் சந்திக்காமல் இருக்கிறார்.

Also Read:பிசினஸில் நயன்தாராவை மிஞ்சிய அனிருத்.. சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட தொழில்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்