விரக்தியில் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா.. அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்த அவலம்

Actress Samantha: சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்து அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். இவருக்கு இருந்த ஏகப்பட்ட ரசிகர்கள் காரணமாக திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் இவருக்கு விவாகரத்து ஆனது. அதன் பின் கொஞ்ச நாளிலே மிகக் கொடுமையான மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிப்புக்கு ஆளானார்.

இதனால் ஒரு வருடமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக பழைய மாதிரி வந்த நிலையில் அந்த நோயைப் பொருட்படுத்தாமல் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் நேரம் காலம் சரியில்லாததால் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்காமல் போய்விட்டது.

Also read: மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய 5 பிரபலங்களின் விவாகரத்து.. சமந்தாவை விட ஷாக் கொடுத்த பிசின் நடிகை

அதன் பின் இவருக்கு வந்த நோயின் தாக்கம் குறையாமல் இருந்ததால் கொஞ்சம் அவஸ்தை பட்டார். கூடிய விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஏற்கனவே உடலால் பாதிக்கப்பட்டு வந்தவர் மனதளவிலும் ரொம்பவே சோர்ந்து போய்விட்டார். இதிலிருந்து மீண்டு வருவதற்கு என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த முடியுமோ அதை எல்லாம் செய்து வந்தார்.

ஆனாலும் அதெல்லாம் பிரயோஜனம் இல்லாத அளவிற்கு மறுபடியும் இவருடைய உடல்நிலை தற்போது மோசமாக இருக்கிறது. இதனால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார். அதன் பிறகு வேறு வழி இல்லாமல் ஏற்கனவே நடிப்பதற்கு வாங்கி இருந்த அட்வான்ஸ் தொகையை தற்போது திருப்பிக் கொடுத்து வருகிறார்.

Also read: விஜய் மீது அப்செட்டில் இருக்கும் சமந்தா.. பிறந்தநாள் வாழ்த்து சொல்லாததற்கு இதுதான் காரணம்

அத்துடன் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு சினிமாவை விட்டு விலகி இருக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். இந்த ஒரு வருடத்திற்குள் மனதிற்கு நிம்மதியான விஷயங்களில் மட்டும் கவன செலுத்தி, உடம்பு தேறி வருவதற்கும் ட்ரீட்மென்ட் எடுக்க போகிறார். ஏனென்றால் அந்த அளவிற்கு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

இவரைப் பற்றி விஷயங்கள் தற்போது ரசிகர்களுக்கு தெரிய வந்த நிலையில் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். ஆனாலும் நீங்கள் நல்லா இருந்தால் போதும் சினிமாவிற்கு வர வேண்டாம். முதலில் எங்களுக்கு நீங்க தான் முக்கியம். அதனால் கொஞ்சம் நீங்கள் நினைத்தபடி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுடைய பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Also read: ஹீரோயின் சொன்னா யாரும் நம்பல ஆனா வெற்றி பெற்ற 5 நடிகைகள்.. தமன்னா, சமந்தாவையே ஓரம் கட்டிய மலைவாசி பெண் நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்