விஜய் மீது அப்செட்டில் இருக்கும் சமந்தா.. பிறந்தநாள் வாழ்த்து சொல்லாததற்கு இதுதான் காரணம்

Actress Samantha: விஜய்க்கு சில நடிகைகளுடன் கெமிஸ்ட்ரி ஒத்துப் போகும். அந்த வகையில் சிம்ரன், திரிஷா மற்றும் சமந்தா ஆகியோருடன் விஜய் ஜோடி போடும்போது திரையில் காண நன்றாக இருக்கும். இந்நிலையில் தற்போது லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். அடுத்ததாக தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி போடுகிறார்.

இந்த படத்தில் யார் கதாநாயகி என்ற போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமந்தா, விஜய் கூட்டணியில் தெறி, மெர்சல், கத்தி ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளை கோலிவுட் சினிமாவே கோலாகலமாக கொண்டாடியது.

Also Read : வெங்கட் பிரபு படத்துடன் ஜாலி பண்ண போகும் தளபதி.. உதயநிதியை அப்படியே பின்பற்றும் விஜய்

மேலும் லியோ படத்தின் கதாநாயகி திரிஷா விஜய் உடன் காஷ்மீரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த முறை சமந்தா விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நிலையில் இந்த வருடம் எந்த பதிவுமே போடவில்லை.

இதற்கு காரணம் விஜய் மீது இருக்கும் கோபம்தான் என்று கூறப்படுகிறது. அதாவது சமந்தா உடல்நிலை பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் விஜய் தனது படத்தில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தாராம்.

Also Read : ரஜினியை போல ஏமாற்றும் விஜய்.. அதிருப்தியை ஏற்படுத்தும் சம்பவம்

ஆனால் லோகேஷ் லியோ படத்தில் திரிஷா தான் கரெக்டாக இருப்பார் என ஃபிக்ஸ் செய்து விட்டார். எப்படியும் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கும் படத்தில் சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்ற திட்டத்தில் விஜய் இருந்துள்ளார். ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் அட்லீயை நிராகரித்து விட்டது.

இதனால் இப்போது விஜய்யின் படத்தில் சமந்தாவுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. அந்த அப்செட்டில் தான் இந்த பிறந்த நாளுக்கு சமந்தா விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து சமந்தாவின் மார்க்கெட் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Also Read : விஜய் மறந்து போன 4 நடிகர்கள்.. லியோ சூட்டிங் ஸ்பாட்டில் தளபதி வாங்கிய மொக்கை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்