அஜித் சாதனையை பிடிக்க திணறும் சல்மான் கான்.. பட்ஜெட்டில் பாதியை கூட தாண்டாத வீரம் ரீமேக்

பொதுவாக ரீமேக் செய்யும் படங்கள் என்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகத்தான் இருக்க முடியும். அது போன்ற படங்களை இயக்குனர்கள் மீண்டும் ரீமேக் செய்வது வழக்கமாக மாறி உள்ள நிலையில் தற்பொழுது ஹிந்தியில் வெளிவந்த கிசி கா பாய் கிசி கி ஜான் 2014ல் வெளிவந்த வீரம் படத்தின் ரீமேக் ஆகும்.

அஜித் மற்றும் தமன்னாவின் நடிப்பில் வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. இப்படத்திற்கு போட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு லாபத்தை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து அதன் ரீமேக் படமான கிசிகாபாய் கிசுகி ஜானின் மூன்று நாள் வசூல் சுமார் 68.7 கோடியை தாண்டி உள்ளது.

Also Read:பிள்ளையார் சுழி போடாத நிலையில் எண்ட் கார்டு போட்ட ஏகே 62.. அஜித்திற்கு கொடுத்த நெருக்கடி

இப்படத்தின் கலெக்ஷன் ஆக பார்க்கையில் முதல் நாள் ரூபாய் 15. 81 கோடியும், இரண்டாம் நாள் 25.75 கோடியையும் மற்றும் மூன்றாவது நாள் வசூலாக பார்க்கும்போது 26.61 கோடியை பெற்றுள்ளது.படத் தொடக்கத்தில் இது போன்ற வசூலை அள்ளும் ரீமேக் படங்கள் நாளடைவில் காணாமல் சென்று விடுகிறது.

அது போன்ற நிலைமை இப்படத்திற்கு ஏற்படுமா என்று கேள்வியும் மக்களிடையே முன் வைக்கப்படுகிறது. வீரம் படத்தின் ரீமேக் ஆன இப்படத்தின் பட்ஜெட்டே 150 கோடியெனின் இதன் லாபம் இதைவிட அதிகமாக இருந்தால் தான் அப்படம் வெற்றி பெற்றதாக கூற முடியும்.

Also Read:விஜய் படத்தில் நடிக்க மறுத்த சல்மான்கான்.. காரணம் கேட்டு அதிருப்தியில் படக்குழு

அதனால் இனி வரும் நாட்களிலும் இப்படம் அதிக வசூலை பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்போதுதான் முதலுக்கு மோசம் இல்லாமல் இருக்கும். அந்த கவலையில் தான் பட குழு தற்போது இருக்கிறது.

இதைத் தொடர்ந்து எதிர்பார்த்த வசூலை இப்படம் எடுக்குமா என்ற மன உளைச்சலில் இருக்கின்றார் சல்மான் கான். வீரம் படத்தின் வெற்றியை கண்டு ஹிந்தியில் தயாரிப்பை மேற்கொண்ட சல்மானுக்கு இந்தப் படம் எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.