வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஆடவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா

இப்படி ஒரு ரீ என்ட்ரியா! என ரசிகர்கள் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆர்யாவின் மனைவி சாயிஷா, சிம்புவின் பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாயிஷா, ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்ததன் மூலம் இருவரும் காதலித்தனர்.

பிறகு 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட சாயிஷா, சிம்புவின் பத்து தல படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ராவடி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இந்த பாடலில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து கவர்ச்சி தூக்கலாக ஆட்டம் போட்டிருக்கிறார்.

Also Read: பிளேபாய் அவதாரம் எடுத்த சிம்பு.. உலக நாயகன் கமலஹாசன் கொடுத்த ஐடியா

சாயிஷா இந்த ஒரு பாடலுக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே நடிகை சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனம் ஆடி இளசுகளை கிறங்கடித்தார். இதற்காக சமந்தா சில பல கோடிகளை சம்பளமாக பெற்ற நிலையில் சாயிஷாவும் அதே போன்ற கெட்டப்பில் பத்து தல படத்தில் ஆட்டம் போட்டிருப்பதால் அவருக்கும் சம்பளம் அதிகமாக இருந்திருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் சாயிஷா இந்த ஒரு பாடலுக்காக வெறும் 40 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறார். அதுவும் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் பத்து தல படத்தில் முன்னணி நடிகைகளை வைத்து இந்த பாடலை எடுத்திருந்தால், சில கோடிகள் செலவாகும் என்பதற்காகவே தயாரிப்பு நிறுவனம் சாயிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

Also Read: தியேட்டரில் ரிலீஸ் செஞ்சிருக்கலாம் என ஏங்க வைத்த 5 படங்கள்.. ஓடிடிலையே பெத்த லாபம் பார்த்த சார்பட்டா

ஆனால் ஆர்யா தனது மனைவியை குத்தாட்டம் போட்டதை வேடிக்கை பார்ப்பதற்கு முக்கிய காரணம், அவர் ஹீரோயினாக நடித்தாலே ஒரு படத்திற்கு 30 முதல் 40 லட்சம் தான் சம்பளமாக வாங்கினார். அப்படி இருக்கும்போது ஒரு பாடலுக்கு இவ்வளவு தொகை என்பது பெரிய விஷயம் தான்.

மேலும் சாயிஷாவிடம் சோசியல் மீடியாவில் எதற்காக இப்படி ஒரு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறீர்கள்? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்ததால், அதற்கு பதில் அளித்துள்ளார். ‘எனக்கு பிடித்தமான விஷயத்தை செய்வதில் எப்போதும் நான் தயக்கம் காட்டியதில்லை. டான்ஸ் என்பது சிறுவயதில் இருந்தே மிகவும் பிடிக்கும். அதை செய்ததில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை’ என்று சாயிஷா நெத்தியடி பதில் கொடுத்திருக்கிறார்.

Also Read: மேட்ச் பாக்க ரெடியா? 2 வது ரவுண்டுக்கு தயாரான ஆர்யாவின் வைரல் போஸ்டர்

- Advertisement -

Trending News