பிக்பாஸின் முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை.. கமல் வாங்கிய சம்பள பட்டியல்

Bigg Boss Kamal Salary: 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. தற்போது 7வது சீசன் காரசாரமாக ஒளிபரப்புகிறது. தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, தெலுங்கு என பிற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஆனால் மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் பிக் பாஸ் கொஞ்சம் டீசன்டாகவே இருக்கும். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை அனைத்து தரப்பு வயதினரும் பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆனால் பிறமொழி பிக் பாஸில் கட்டிப்பிடிப்பது, லிப் லாக், படுகையறை காட்சி என மோசமாக காட்டப்படும்.

தமிழ் பிக் பாஸ் இவ்வளவு கட்டுப்பாடாகவும் ஒழுங்கு முறையாகவும் இருப்பதற்கு காரணம் உலகநாயகன் கமலஹாசன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும் தான். இவர் எடுக்கும் ஒரு சில முடிவுகள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனாலும், பெரும்பாலான முடிவுகள் நம்மளுள் ஒருவராகவே தான் நடுநிலையுடன் இருந்து பேசுகிறார்.

Also read: மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு உண்மையான சுயரூபத்தை காட்டிய நிக்சன்.. பெண்கள் பாதுகாப்பு இதுவா ஆண்டவரே.?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் வாங்கிய சம்பள விவரம்

பிக் பாஸ் ரசிகர்களிடம் ஆண்டவராகவே பார்க்கப்படும் கமல், முதல் சீசனில் 10 கோடி வாங்கினார். இரண்டாவது சீசனில் 25 கோடியை சம்பளமாக பெற்றார். மூன்றாவது சீசனில் 45 கோடியும், நான்காவது சீசனில் 50 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஐந்தாவது சீசனில் 70 கோடி சம்பளமாக கமலுக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ஆறாவது சீசனில் 75 கோடியை சம்பளமாக கமல் பெற்றார்.

இதைத் தொடர்ந்து ஏழாவது சீசனில் முந்தைய சீசனை விட 55 கோடியை சம்பள உயர்வாக விஜய் டிவி கமலுக்கு வாரி வழங்கியது. ஏழாவது சீசனை ஒளிபரப்பு செய்வதற்கு மட்டும் கமலுக்கு மொத்தமாக 130 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. இப்படி கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிக்கும் உலக நாயகன் கமலஹாசன், இந்த காசை அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப் பார்க்கிறார்.

ஆனால் இப்போது மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெள்ள நிவாரண நிதியாக கொஞ்சம் கூட கொடுக்காமல் சைலன்டாக இருக்கிறார். தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்களுக்கு உணவுகளை மட்டும் ஏற்பாடு செய்து வழங்குகிறார்.

Also read: கமலை போல் பல மொழிகளில் நடிக்கும் 2 ஹீரோக்கள்.. பான் இந்தியா படங்களுக்கு டப்பிங் பேசும் வில்லன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்