மார்க் ஆண்டனியில் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்.. விஷாலின் சம்பளத்தில் பாதி கூட வாங்காத எஸ்ஜே சூர்யா

Mark Antony: வந்தா சுட்டான் செத்தான் என மாநாடு படத்தின் மூலம் ஒரு கெத்தை உருவாக்கிய எஸ்ஜே சூர்யா அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் வந்து சென்றார். ஆனால் மீண்டும் மாநாடு படத்தின் அளவுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் எப்போது எஸ்ஜே சூர்யாவுக்கு கிடைக்கும் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றுவிட்டார் எஸ்ஜே சூர்யா. இந்த கதாபாத்திரத்திற்கு அவர் நடித்ததால் மட்டுமே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : ஜவானை ஆட்டம் காண வைத்த மார்க் ஆண்டனி.. மிரட்டும் 3 நாள் வசூல் ரிப்போர்ட்

இந்நிலையில் வசூலில் சக்கை போடு போட்டு வரும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்த பிரபலங்களின் சம்பளம் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது பலருக்கும் ஆச்சரியத்தை தான் அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் விஷாலை விட எஸ்ஜே சூர்யா தான் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு அதிக காரணம்.

ஆனால் விஷால் வாங்கிய சம்பளத்தில் பாதி கூட எஸ்ஜே சூர்யாவுக்கு கொடுக்காதது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் மார்க் ஆண்டனி படத்திற்கு விஷாலின் சம்பளம் கிட்டத்தட்ட 7 கோடி ஆகும். ஆனால் இதில் எஸ்ஜே சூர்யாவுக்கு வெறும் 3 கோடி மட்டுமே சம்பளமாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது.

Also Read : விஷால் சொந்த செலவில் சூனியம் வைத்த 10 படங்களில் 5 வெற்றி.. மார்க் ஆண்டனி படத்தை தவறவிட்டது தப்பா போச்சு.!

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ரித்து வர்மா ஐம்பதாயிரம் சம்பளமாக பெற்று இருக்கிறார். இந்நிலையில் மார்க் ஆண்டனி படம் வெளியான சில நாட்களிலேயே போட்ட பட்ஜெட்டை எடுத்து விட்டது. இப்போது திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி வருவதால் இனி வசூல் செய்யும் அனைத்துமே லாபம் தான்.

ஆகையால் இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருந்த எஸ்ஜே சூர்யாவுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் கண்டிப்பாக பரிசு வழங்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் எஸ்ஜே சூர்யா தொடர்ந்து இதுபோன்ற வெயிட்டான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

Also Read : நடிச்ச 35 படத்தில் 10 படம் மட்டுமே வெற்றியா.? விஷாலை குழிதோண்டி புதைத்த தோல்வி படங்கள்

- Advertisement -