குணசேகரனுடன் மோதும் சக்தி.. குத்தி கிளறி விட்டு, வாடிவாசல் மோதலாக மாறிய எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல். இதில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசம் என்ற வேசத்தினை போட்டு தங்களுக்கு இடையில் யாரும் நுழைந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும் உள்ள கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு குணசேகரனுடன் சக்தி மோதுவது எதிர்நீச்சல் சீரியல் ஆனது வாடிவாசல் ஆக மாறி உள்ளது என்பதை உணர்த்துகிறது. இதனைத் தொடர்ந்து தினம் தினம் எதிர்பார்க்க முடியாத சுவாரசியமான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.

குடும்பத்தில் உள்ள அனைவரும் உணவருந்த காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது விசாலாட்சி நந்தினியிடம் மற்ற மருமகள் எல்லாம் எங்கே என்று கேட்கிறார். உடனே நந்தினி அவர்கள் அனைவரும் ஸ்கூலுக்கு சென்று உள்ளனர் என்ற பதிலை கொடுக்கிறார். இதனால் கோபம் கொண்ட விசாலாட்சி மாமியார் என்ற குணத்தை நந்தினியிடம் காண்பிக்கிறார். முதலில் யாரை கேட்டு அவர்கள் பள்ளிக்கு சென்றார்கள் என்று கடுமையாக நந்தினியிடம் பேசுகிறார்.

Also Read: ஒரே கதையை வைத்து 2 சீரியல்களை உருட்டும் விஜய் டிவி.. இதுக்கெல்லாம் டிஆர்பி ரேட்டிங் ஒரு கேடு

உடனே நந்தினியை காப்பாற்றும் விதமாக பட்டம்மாள் அப்பத்தா நான்தான் அவர்களை பள்ளிக்கு போக சொன்னேன் என்று விசாலாட்சியிடம் கூறுகிறார். இவ்வளவு நேரம் பஜாரியாக கத்திக் கொண்டு இருந்த விசாலாட்சி தனது மாமியாரின் சொல்லால் வாயடைத்து நின்றார். இதனைக் கேட்டுக் கொண்டே இருந்த குணசேகரன் மற்றும் அவரது தம்பிகளுக்கு கோபம் தலைக்கேறியது. ஆனால் குணசேகரன் எதுவும் பேசாமல் தனது பார்வையிலேயே கோபத்தினை வெளிப்படுத்துகிறார்.

இது ஒரு புறம் இருக்க குணசேகரன், விசாலாட்சி, ஆதிரை, ஞானம் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது சக்தி அங்கு வருகிறார். அப்பொழுது குணசேகரன் சக்தியிடம் நீ கதிருடன் சென்று வக்கீலை பார்த்து கேஸ் கொடுத்து கையெழுத்து போட்டுவிட்டு வந்துவிடு என்று கூறுகிறார்.

Also Read: டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

ஆனால் சக்தி அதற்கு மாறாக இதுவரையிலும் அண்ணன் என்று மரியாதைக்காக எதிர்த்து பேசாமல் இருந்து வந்துள்ளார். ஆனால் தற்பொழுது ஜனனியின் நல்ல மனதை புரிந்து கொண்ட சக்தி தனது முடிவினை மாற்றி எது சரி எது தவறு என்பதை உணர்ந்து தானாக சுயமாக ஒரு முடிவினை எடுத்துள்ளார். அதனை தைரியமாக தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சக்தியின் இந்த செயலால் குணசேகரன் திட்டம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும் சக்தியும் ஜனனியும் ஒருவேளை ஒன்று சேர்ந்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் உள்ளார் என்பதை தெளிவாக காட்டுகிறது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜனனி சக்தி தனது அண்ணன் குணசேகரனிடம் என்னதான் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது போல் இன்றைய ப்ரோமோ ஆனது வெளியாகி உள்ளது.

Also Read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்

இவ்வாறு சக்தி குணசேகரனின் பிடியிலிருந்தும் பாசம் என்ற வேஷம் கலைந்து இப்பொழுதுதான் ஒரு உணர்ச்சி உள்ள மனிதனாகவும் சக மனிதர்களையும் பெண்களையும் மதிப்பவராக மாறி உள்ளார் என்பது போல் சுவாரசியம் கலந்த எதிர்பார்ப்போடு எதிர்நீச்சல் சீரியல் ஆனது தொடர்ந்து வாடிவாசல் ஆக மாறி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

- Advertisement -