ஜனனியை காப்பாற்றிய சக்தி.. இவ்வளவு சீக்கிரமா சேர்ந்துட்டாங்க எதிர்நீச்சலில் ஏற்பட்ட ட்விஸ்ட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல் சமூகத்தில் என்னதான் பெண் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இன்றைய காலகட்டத்திலும் ஒரு சில இடங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தினம் தினம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் குணசேகரன் போல் மூர்க்க தனமான குணம் கொண்ட ஆண்களும் சமூகத்தில் உள்ளனர்.

இவர்களிடம் இருந்து பெண்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதையும் மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. குடும்பத்தில் எவ்வளவுதான் சொத்துக்கள் இருந்தாலும் அதனை கட்டி நிர்வகிக்கும் ஒருவரிடம் மட்டுமே அதற்கான அனைத்து அதிகாரங்களும் உரிமைகளும் இருக்கின்றன.

குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும் சுயமாக ஒரு செயலுக்கான முடிவினை கூட எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளனர். சக்தி இதனை பொது இடத்தில் தனக்கான மரியாதையை தெரிந்து கொண்டதன் மூலம் தனக்கான சுயமரியாதையினை எவ்வாறு பெற வேண்டும் என்பதனை மனதில் வைத்துக் கொண்டு தனக்கு குடும்பத்தில் எந்த சொத்துக்களும் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்.

Also Read: டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

இதனை குணசேகரன் மற்றும் குடும்பத்தாரிடமும் தெரிவித்துள்ள சக்தி புதிதாக வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக வீட்டில் உள்ள தனது அன்னிகளிடத்தில் ஆசீர்வாதத்தனையும் பெற்று சென்றுள்ளார். திடீரென்று அந்நியதாக இருந்த சக்தி அம்பியாக மாறிவிட்டதை நினைத்து வீட்டில் உள்ள மருமகள்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதே நிலையில் நீடிக்க வேண்டும் என்றும் சக்தியும் ஜனனியும் ஒன்று சேர வேண்டும் என்று நினைக்கின்றனர். இவ்வாறு சக்தி வேலையில் சேர்வதற்காக கம்பெனியின் முதலாளியை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் கம்பெனியின் மேனேஜர் சக்தி இடம் கடையின் ஓனர் இங்கே இல்லை என்று கூறுகிறார். ஆனால் சக்தி அவர் எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் நானே சென்று பார்க்கிறேன் என்று கேட்கின்றார்.

மறுபுறம் ஜனனி தனது வேலையாக கிளைன்டை சந்திக்க சென்றுள்ளார். அங்கு ஜனனி எங்களது நிறுவனத்தில் உங்களது பணத்தை முதலீடு செய்யுங்கள் என்று எடுத்துச் சொல்கிறார். ஆனால் அவரோ தவறான முறையில் ஜனனியிடம் பேசுகிறார். காருக்கு பணம் கொடுப்பதை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் நல்லா ரிச் ஆக வாழலாம் இல்லமா இது உனக்கு புரிகிறதா என்று கேட்கிறார்.

Also Read: விஜய்யை வாண்டடா வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. ரெய்டிற்கு பிறகு புலி பாயுமா? பதுங்குமா?

இதனால் கோபம் கொண்ட ஜனனி அவரை முறைப்பது போலவும், இதனைக் கேட்டுக் கொண்டே இருந்த சக்தி நன்றாகவே புரிகிறது என்று பதில் கூறுகிறார். இதனால் ஜனனிக்கும் கிளைண்டுக்கும் அதிர்ச்சியை தருகிறது. சக்தி மிகவும் கோபத்துடன் அவரைப் பார்த்து இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசின அவ்வளவு தான் உனக்கு என்று வா ஜனனி போகலாம் என்று ஜனனியை கையைப் பிடித்து கூட்டி செல்வது போல புரோமோ வெளியாகி உள்ளது.

இவ்வாறு சக்தி தனது அண்ணன்களைப் போல் முரட்டு குணம் கொண்டவர்களாக அல்லாமல் சாதுவாக தனக்குள் இருக்கும் அம்பியை வெளிப்படுத்தி நல்லவராக மாறியுள்ளார். இதனால் இந்த வருடத்தின் புத்தாண்டு ட்ரீட்டாக சக்தி முழு மனதாக மாறி ஜனனியை ஏற்றுக் கொள்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சக்தியின் செயல்கள் ஆனது குணசேகரனுக்கு மேலும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமையப்போகிறது என்பதை நன்றாகவே உணர்த்துகிறது.

Also Read: 25 வருடமாகியும் மக்கள் கொண்டாடும் சன்டிவியின் ஒரே சீரியல்.. கலாநிதி மாறனை புகழ்ந்து தள்ளிய நடிகை

- Advertisement -