அவ்வளவு நெருக்கமால்லாம் நடிக்க முடியாது.. பிரபல நடிகரை வெறுத்து ஒதுக்கிய சாய் பல்லவி

சாய் பல்லவி சிரிப்பின் மூலம் அனைத்து இளைஞர்களையும் ஏன் பெண்களையும் கூட கவர்ந்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவரின் நடனமும், நடிப்பும் பார்த்தவுடன் பிடிக்கும் அளவிற்கு இருக்கிறது. இவர் கதை தேர்வு செய்யும் விதம் கூட இவரின் தைரியத்தையும் இவரின் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தையும் நிரூபிக்கிறது.

தெலுங்கு சினிமாவில் இவர் அதிக திரைப்படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் மிகக் குறைவான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சில கதாநாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று தைரியமாக கூறுவார். சமீபத்தில் இவர் மாட்டுக்கறி மற்றும் முஸ்லிம்கள் படுகொலை போன்றவற்றினை தைரியமாக கூறினார்.

Also read: மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி.. சபாஷ், சரியான முடிவு!

அதற்கு பல சர்ச்சைக்கு உள்ளானார். இருந்த போதிலும் தனது கருத்தை மாற்றாமல் அதில் உறுதியாக இருந்து வந்தார். தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமாக சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது வெளிவந்த கார்க்கி என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய நல்ல நடிப்புக்கான பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. படமும் வெற்றியும் பெற்றுள்ளது.

இவர் அடுத்தடுத்து கதைகளைத் தேர்வு செய்வது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து வருகிறார். தெலுங்கு நடிகர் விஜய்தேவர்கொண்டா அனைவருக்கும் பிடித்த ரொமான்டிக் ஹீரோவாக இன்று வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also read: ஓவர் அலப்பறை காட்டும் சாய் பல்லவி.. இயக்குனரிடமே பந்தா பண்ணியதால் வாய்ப்பு போன பரிதாபம்

சாய்பல்லவி இனிமேல் விஜய்தேவர்கொண்டா திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறி இருக்கிறார். காரணம் இவரது திரைப்படத்தில் காதல் காட்சிகளும் அதில் நெருக்கமான காட்சிகளும் அதிகம் வருவதால் எனக்கு பிடிக்கவில்லை அதனால் இனிமேல் அவர் படங்களில் நடிக்க மாட்டேன் என்று தைரியமாக கூறியிருக்கிறார்.

Also read: நடன போட்டியில் தோல்வி.. ஆனா அதே நடுவருடன் ஜோடி போட போகும் சாய் பல்லவி

இவரை சினிமாவில் அனைவரும் பாராட்டி வருகின்றார் மிகவும் தைரியமான பெண் என்ற பெயரையும் பெற்று வருகிறார். இதேபோல் அனைத்து கதாநாயகிகளும் எடுக்கும் முடிவுகள் கதாநாயகிகளையும் காப்பாற்றும் மற்ற பெண்களுக்கும் சினிமாவில் தைரியமாக பேச வேண்டும் என்ற எண்ணம் வரும்.