ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஓவர் அலப்பறை காட்டும் சாய் பல்லவி.. இயக்குனரிடமே பந்தா பண்ணியதால் வாய்ப்பு போன பரிதாபம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் இவருடைய பேச்சு இணையத்தில் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் நானி கதாநாயகனாக நடிக்கும் ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு இயக்குனரிடம் சாய்பல்லவி ஓவர் அலப்பறையை காட்டி வெயிட்டான கதாபாத்திரத்தை இழந்துள்ளார். அதாவது பி வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்க உள்ளனர்.

இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். மேலும் சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதுவும் ஜோதிகா சந்திரமுகியாக மாறும் போது அவருடைய ஒவ்வொரு அசைவும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதனால் ஜோதிகாவுக்கு இணையான ஹீரோயினும் சந்திரமுகி 2 படத்திற்கு தேடி வந்தனர். தற்போது சாய்பல்லவி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார் போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார். இதனால் இயக்குனர் பி வாசு சாய் பல்லவியை நடிக்க வைக்கலாம் என தேர்வு செய்துள்ளார்.

இதனால் சாய்பல்லவி இடம் பி வாசு படத்தின் கதையை சொல்லும்போது சாய்பல்லவி ஓவர் ஆட்டிட்யூட் காட்டியுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் கதை சொல்லும்போது படத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என ஓவர் அலம்பல் காட்டியுள்ளார். இது எல்லாவற்றிற்கும் மேலாக கிளைமாக்ஸ் காட்சியை மாற்றும்படி வாசுவிடம் சாய்பல்லவி கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பி வாசு நான் வேறு நடிகையை பார்த்துக்கொள்கிறேன் என நடையை கட்டுவிட்டாராம். சந்திரமுகி படத்தின் ஆணிவேரு ஜோதிகா தான். ஆனால் சாய்பல்லவி ஓவரா அலப்பறை காட்டி அந்த வாய்ப்பை இழந்துள்ளார்.

- Advertisement -

Trending News