தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குடும்ப தலைவிகளுக்கு மிகவும் ஆறுதலாகவும், என்டர்டைன்மென்ட் ஆகவும் இருக்கும். அதிலும் ஒரு சில தொலைக்காட்சி மக்களின் மனதில் பெருமளவு ஆதிக்கம் செலுத்திவிடும். அந்தவகையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் படியான புதுப்புது தொடர்கள் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அள்ளித் தருவதாகும்.
விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் நபர்கள் கண்டிப்பாக வெள்ளித்திரையிலும் வெற்றிக் கொடியை நாட்டுவார்கள் என்பதற்கு ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன. அதை ரசிகர்கள் மட்டுமின்றி வெற்றியடைந்த பிரபலங்களை பல பேட்டிகளில் கூறியுள்ளனர். ரியாலிட்டி ஷோக்களை வேற லெவல் சுவாரஸ்யமாக நடத்துவது விஜய் டிவிதான் என்று ரசிகர் பட்டாளம் தெரிவித்துள்ளது. மட்டுமல்லாது தொடர்களையும் முற்றிலும் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாக செல்கிறது.
கடந்த சில காலமாக தொடர்களின் தலைப்புகள் திரைப்படங்களின் டைட்டில்களை கொண்டதாகவே அமைந்துள்ளது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரமான ரோஜாவே என்ற தொடர் மக்களிடையே அதிக பிணைப்பை கொண்டது . நல்ல குடும்ப கதையை மையமாக வைத்து அமைந்தது இந்த தொடர் அதில் அவ்வப்போது பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நிறைந்துள்ளன.
இவ்வாறு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே தொடர் விரைவில் முடிவுக்கு வரப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இத்தொடரில் அகிலா (அகிலாண்டேஸ்வரி )ஆக நடிக்கும் சாய் காயத்ரி தன்னுடைய இன்ஸ்டால் 2 புகைப்படம் மற்றும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஈரமான ரோஜாவே குழு அனைவரும் சேர்ந்து செல்பி எடுப்பது போலவும் குரூப் ஃபோட்டோ ஒன்றும் மற்றும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து “ஈரமான ரோஜாவே “என்று கூச்சலிடும் படியான வீடியோவையும் பதிவிட்டு இருக்கிறார். மேலும் அதில் “அனைத்தும் முடிந்துவிட்டது இன்றுதான் கடைசி நாள் ஷூட்டிங்” என்று குழுவினர் அனைவரையும் தான் மிஸ் பண்ணுவதாக பதிவிட்டிருக்கிறார் .இதைக்கண்ட ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.