திடீரென சோசியல் மீடியாவில் கதறி அழுத சதா.. எல்லாம் முடிந்தது என வெறுத்துப்போன காரணம்

ஜெயம் ரவியின் அறிமுகப்படமான ஜெயம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சதா. அதன் பிறகு உச்ச நட்சத்திரமாக இருந்த அஜித், விக்ரம் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக சதா வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களிலேயே இவரது மார்க்கெட் சரிய தொடங்கியது.

எலி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சதா நடித்தது அவரது கேரியரின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் திடீரென சோசியல் மீடியாவில் சதா கதறி கதறி அழுத வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இவ்வாறு அவர் செய்ததற்கான காரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Also Read : சமீபத்தில் ஹிட் கொடுக்க திணறி வரும் 5 ஹீரோக்கள்.. கும்பலோடு கோவிந்தா போடும் ஜெயம் ரவி

அதாவது சதா சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு மும்பையில் ஹோட்டல் பிசினஸ் ஒன்றை தொடங்கினார். எர்த்லிங்ஸ் கஃபே என்ற பெயரில் 4 வருடங்களுக்கு மேலாக இயங்கி கொண்டிருக்கிறது. மேலும் சதா இந்த ஹோட்டலை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும் சூட்டிங் நாட்களைத் தவிர பெரும்பாலமான நேரங்களை ஹோட்டலில் தான் செலவிடுகிறாராம். இப்படி நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் இப்போது ஒரு பெரும் பிரச்சனையை சந்தித்திருக்கிறார். அதாவது ஹோட்டல் இருக்கும் இடத்தின் உரிமையாளர் தற்போது கடையை காலி பண்ண சொல்கிறாம்.

Also Read : ரக்கு, தம்மு என சினிமா வாழ்க்கையை தொலைத்த சதா.. பரபரப்பைக் கிளப்பிய பிரபலம்!

மேலும் இந்த கடையை மீட்க எவ்வளவோ முயற்சித்தும் பயனளிக்கவில்லை என கூறி கதறி அழுதுள்ளார். இதனால் இனி தன்னுடைய எர்த்லிங்ஸ் கஃபே முடிந்து விட்டதாக அவர் பேசி வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சதாவிற்கு கமெண்ட் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி நீங்கள் வேறு எந்த இடத்தில் கடையை வைத்தாலும் நாங்கள் வருவோம் என சதாவின் வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் இனி எர்த்லிங்ஸ் கஃபேவை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை சதா எடுக்கக்கூடும். மேலும் இது குறித்து சந்தோசமான வீடியோவை அவரே வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

Also Read : இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு.. மாரி செல்வராஜ் செய்யப் போகும் சம்பவம்