ஸ்பார்க்கை வெளிப்படுத்திய ஓபனர்.. சிக்கலில் தமிழக வீரர், வாய்ப்புக்காக காத்திருக்கும் கொடுமை!

2020 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. தொடக்கத்தில் வரிசையாகத் தோல்விகளை பெற்றுவந்த சிஎஸ்கே அணி. தற்போது அதிலிருந்து மீண்டு வெற்றிகளை ருசிக்க தொடங்கியது. அதிலும் கடைசி மூன்று போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங் எல்லாமே சிறப்பாக அமைந்தது. சிஎஸ்கே அணியில் சொதப்பி வந்த ஓப்பனிங் பேட்டிங்.. கடைசி மூன்று போட்டியில் நன்றாக இருந்தது.

ஓபனிங் இறங்கி வரும் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் கடைசி மூன்று போட்டிகளில் அரை சதம் அடித்துள்ளார். இவர் கடந்த மூன்று போட்டியிலும் சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்து விட்டார். இதனால் மிடில் ஆர்டரில் ஆட வேண்டிய ஜெகதீசனுக்கு பேட்டிங் வாய்ப்பே கிடைக்கவில்லை.

இதன் காரணமாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த தமிழக வீரர் ஜெகதீசன் ஏமாற்றம் அடைந்துள்ளார். இந்த சீசனில் மொத்தம் இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்த ஜெகதீசன் 33 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் டக் அவுட் ஆனார்.

Next Story

- Advertisement -