கர்ணன் படத்தை விட சிறப்பாக இருக்கும் ருத்ர தாண்டவம்.. மேடையிலேயே கோர்த்து விட்ட பிரபலம்

தமிழ் சினிமாவில் பல குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் ராதாரவி. இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. தற்போது இவர் ஒரு சில முக்கியமான கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்து வருகிறார்.

ராதாரவி பொருத்தவரை யாருக்காகவும் எதற்காகவும் எதையும் மாற்றிக் கொள்ள மாட்டார் தனக்கு தோன்றுவதை வெளிப்படையாக பேசி விடுவார். அதனை எப்படி எடுத்துக் கொண்டாலும் அதனை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்.

மோகன் இயக்கத்தில் ரிச்சட் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்துள்ளார். ருத்ர தாண்டவம் பிரஸ்மீட்டில் வெளிப்படையாக பல கருத்துக்களை கூறினார். மேலும் இப்படம் ஒரு நல்ல கருத்தை மக்களுக்கு வெளிப்படையாக சொல்வதற்காக எடுக்கப்பட்டது எனவும் இதனை அனைவரும் பார்த்தால் எதிர்மறையான விமர்சனங்கள் கூற மாட்டார்கள் எனவும் கூறினார்.

Radharavi
Radharavi

மேலும் கர்ணன் படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வைத்து எடுத்து இருந்தனர். மேலும் தனுஷ் இப்படத்தில் நடித்திருந்ததால் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் ரீச்செட் ருத்ர தாண்டவம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படம் வெளியானால் கர்ணன் படத்தைவிட ருத்ரதாண்டவம் படத்தை அனைவரும் பாராட்டுவார்கள் என கூறினார்.

மேலும் இன்று இருக்கும் சாதி தலைவர்கள் யாரும் ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் கிடையாது என்பதை இப்படம் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டும் எனவும் தெரிவித்திருந்தார். இப்படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்து மக்களுக்கும் சொல்லப்பட்ட பொதுவான கருத்துகள் என கூறியிருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்