ரிலீஸுக்கு முன்னாடியே 890 கோடி வசூல் செய்த பிரம்மாண்ட படம்.. பாகுபலியை பந்தாடிவிடும் போல!

இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே 890 கோடி வசூல் செய்தது இதுதான் முதல் முறை என அனைவரும் வியந்து பார்த்து வருகின்றனர். அத்தனைக்கும் சொந்தக்காரர் நம்ம ராஜமௌலி தான்.

முன்னதாக பாகுபலி படங்களின் மூலம் உலக சினிமாவுக்கு சவால் விட்டு வசூலிலும் உலக அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். பாகுபலி படங்கள் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR). இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராமச்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் வில்லன் வேடத்திம், நாயகியாக ஆலியா பட்டும் நடித்து வருகின்றனர். அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் RRR படத்தின் வியாபாரங்கள் தொடங்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு படம் வெளியாவதற்கு முன்னரே 890 கோடி வசூல் செய்துள்ளதாம். இதுதான் இந்திய சினிமாவிலேயே அதிகபட்ச பிரீ பிசினஸ் என்கிறார்கள் டிரேடிங் வட்டாரங்கள்.

உலக அளவில் தியேட்டர் உரிமையை மட்டுமே 570 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. அதனைத் தொடர்ந்து டிஜிட்டல் உரிமம் 170 கோடி, சாட்டிலைட் உரிமை ரூ 130 கோடிக்கும் விலை போயுள்ளதாம். ஆடியோ ரைட்ஸ் 20 கோடிக்கு விலைபோயுள்ளதாக தெலுங்கு சினிமாவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் RRR படத்தின் வசூல் குறைந்தது ஆயிரம் கோடிக்கு மேலாக வருமென இப்போதே கனவு கண்டு கொண்டிருக்கிறார்களாம்.

RRR-pre-business
RRR-pre-business