ரோஜா சீரியல் நடிகையை காதலித்து ஏமாற்றிய பிரபல நடிகர்.. நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட கொடுமை!

ஒரு காலத்தில் சீரியல்களுக்கு குலதெய்வ கோயில் போல் இருந்த சன் டிவியில் சமீபகாலமாக சீரியல்கள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சன் டிவியை தாங்கிப் பிடித்திருக்கும் ஒரே சீரியலில் என்றால் அது ரோஜா தான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி போன்ற சீரியல்களின் காப்பி தான். இருந்தாலும் தற்போதைக்கு சன் டிவியை காப்பாற்றிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதில் நடிகையாக பிரியங்க நல்கரி என்பவர் நடித்து வருகிறார். அக்கட தேசத்தைச் சேர்ந்த இவர் தற்போது தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சீரியலுக்கு வருவதற்கு முன்னரே இவர் தெலுங்கு சீரியலில் கொடிகட்டி பறந்த நடிகை. அப்படி இருந்த போது பிரபல சீரியல் நடிகர் ராகுல் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தாராம்.

மேலும் 2018ஆம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. அதன்பிறகு மலேசியாவுக்கு ஒரு வேலை விஷயமாக சென்ற ராகுல் அங்கேயே நல்ல வசதியான பெண்ணை பார்த்து காதல் வலையில் விழுந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது உண்மையில்லை எனவும் மறுத்து வருகின்றனர்.

ராகுல் மலேசியா சென்ற பிறகு அவரை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார் பிரியங்கா. ஆனால் எதற்குமே சரியான முறையில் அவர் பதிலளிக்கவில்லை என்பதால் ராகுல் தன்னை மறந்து விட்டார் என்பதை புரிந்து கொண்டு விலகி விட்டாராம் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா. அளவு கடந்த காதல் வைத்திருந்த பிரியங்காவுக்கு அந்த சோகத்திலிருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாம்.

அதன்பிறகு தற்போது வரை காதலும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம் என காதலைப் பற்றி பேசினாலே செம காண்டாகி விடுகிறாராம். சினிமாவுக்கு அடி போடும் பிரியங்கா சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

roja-serial-actress-priyanka-rahul-engagement
roja-serial-actress-priyanka-rahul-engagement
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்