சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜயா கனவில் மண்ணை அள்ளி போடும் ரோகினியின் மாமா.. இனி மீனாவின் நிலைமைதான்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி இல்லாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று விஜயா அடம் பிடிக்கிறார். உடனே முத்து ஒரு ஐடியா பண்ணி பிரியாணியை வீட்டிற்கு வாங்கிட்டு வந்து அம்மாவை சாப்பிட வைத்து விடுகிறார்.

அப்பொழுது விஜயா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ரோகிணி இடம் ஏன் இன்னும் உன் அப்பா வரவில்லை என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ரோகிணி எனக்கும் தெரியவில்லை என்று பதில் சொல்ல, உடனே முத்து அப்படி என்றால் உன் மாமாவுக்கு போன் பண்ணி கேட்க வேண்டியதுதானே என்று சொல்கிறார்.

உடனே அவருக்கும் போன் போக மாட்டேங்குது என்று கூறுகிறார். அதற்கு முத்து, இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கிறது என்று சொல்ல விஜயாவும் ரோகிணி இடம் கோபமாக பேசிவிட்டார். இதனை தொடர்ந்து தனியாக இருக்கும் ரோகினியை பார்த்து நீ என்ன பண்ணுவியோ இல்லையோ உன் அப்பா இன்னைக்குள்ள வந்து இருக்கணும் என்று கூறிவிட்டார்.

அப்படி மட்டும் இல்லை என்றால் உன்னை எந்த இடத்தில் வைப்பேன் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று மிரட்டுகிறார். உடனே நீலி கண்ணீரை வடித்த ரோகிணியை பார்த்து விஜயா கொஞ்சம் கூட கவலைப்படாமல் இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மறுபடியும் என்னை முட்டாள் ஆக்காத. உன் அப்பா வீட்டிற்கு வந்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

இதற்கெல்லாம் தீர்வாக ரோகிணி, மாமாவாக நடிக்க வைத்த மணியை வீட்டிற்கு வரவழைத்து இன்னொரு ட்ராமாவை ஆரம்பித்து விட்டார். அதாவது வீட்டிற்கு வந்த ரோகினியின் மாமா, விஜயா மற்றும் அண்ணாமலையிடம் ரோகிணியின் அப்பா பண்ணின பிசினஸ் ரொம்பவே லாஸ் ஆகிவிட்டது. தற்போது ஜெயிலில் தான் இருக்கிறார் என்று பொய் சொல்கிறார்.

இதனால் விஜயா, ரோகிணி வைத்து மனோஜ்க்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று கண்ட கனவெல்லாம் சுக்கு நூறாக உடைந்து விட்டதாக புலம்புகிறார். இனி ரோகினிக்கு விஜயா எந்த மாதிரியான ஒரு மாமியாராக இருக்கப் போகிறார் என்றால் மீனாவைப் போல அடிமையாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆட்டிப்படைக்க போகிறார்.

- Advertisement -

Trending News