மனோஜை ஆட்டிப்படைக்க தில்லாலங்கடி வேலை பண்ணும் ரோகினி.. கிடக்கிற கேப்ல கெடா வெட்டும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் கையில் 30 லட்ச ரூபாய் பணம் இருக்கும் திமிரில் கொஞ்சம் தெனாவெட்டாவாகவே பேசுகிறார். இதுல அப்பப்போ ரோகிணி வேற மனோஜ்க்கு தூபம் போடுகிறார். அதாவது இன்னும் பிசினஸ் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் பிசினஸ் பண்ணி பல கோடி லாபத்தை சம்பாதித்த மாதிரி மனோஜ் ஓவராக பில்டப் கொடுக்கிறார்.

அந்த வகையில் நான் ஸ்மார்ட் ஒர்க் பண்ணி பிசினஸை அதிகரிக்க நினைக்கும் ஒரு தொழிலதிபரை இப்படி தரையில படுக்க வச்சிட்டியே அம்மா என்று விஜயாவிடம் கோபப்படுகிறார். அதற்கு விஜயா நான் என்ன பண்ண இது அப்பா எடுத்த முடிவு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று சொல்கிறார். அட்லீஸ்ட் இங்க கொஞ்சம் ஏசியாவது இருந்திருந்தால் நல்லா தூக்கமாவது வந்திருக்கும் என்று மனோஜ் புலம்புகிறார்.

தோற்கப் போகும் மனோஜ் ரோகினி

அதற்கு விஜயா நாங்களும் இங்க தானே இத்தனை நாளாக தூங்கி இருந்தோம். அப்பொழுதெல்லாம் உங்களுக்கு இது தெரியவில்லையா என்று கேட்கிறார். பிறகு ரோகினிடம் புலம்பும் பொழுது, மனோஜ் சீக்கிரத்திலேயே நம்ம ஒரு தனி பிளாட்டு வாங்கி போய்விடலாம் என்று சொல்கிறார். உடனே ரோகிணி நீ சொல்வதும் கரெக்ட் தான் நம் தனியாக போய்விடலாம் என்று ரோகிணி மனோஜை திசை திருப்புகிறார்.

எப்படியாவது மனோஜை கைக்குள் போட்டு விட்டால் நாம் செய்த பொய் பித்தலாட்டங்கள் பெரிய விஷயமாக வெளிவராது என்று ரோகிணி கணக்கு பண்ணுகிறார். ஆனால் எல்லாமே தர மட்டமாக நொறுங்க போகிறது. அதுவும் முத்து மூலமாக தான் நடக்கப்போகிறது என்பது நினைக்கும் போது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதாவது ஜீவா ரோகினிடம் கொடுத்த பணத்தால் கனடாவிற்கு போகாமல் இங்கே இருக்கிறார்.

பிறகு ஜீவா மற்றும் முத்துவும் சந்திக்கும் நேரம் வரப்போகிறது. அப்பொழுது பணம் விஷயம் முத்துவிற்கு தெரிய வரப்போகிறது. இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தின் முன் மனோஜ் மட்டும் இல்லாமல் ரோகினையும் அவமானப்பட்டு நிற்கப் போகிறார்.

சும்மாவே கிடைக்கிற கேப்புல ரோகிணியை முத்து வச்சு செய்வாரு. இந்த ஒரு விஷயம் மட்டும் முத்துவுக்கு தெரிந்து விட்டால் ரோகிணி தொக்காக மாட்டி விடுவார். இந்த ஒரு சந்தர்ப்பத்திற்கு தான் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஏற்ப ரோகிணி கையும் களவுமாக சிக்கித் தவிக்கப் போகிறார்.

- Advertisement -