ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

முத்துவை கவுக்க சிட்டியுடன் பிளான் பண்ணும் ரோகினி.. தனக்குத்தானே மண்ணை வாரி போடப் போகும் கல்யாணி

Sirakadikkum Asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தங்கை சீதாவிற்கு நல்ல குடும்பமாக எதிர்பார்த்த குணங்களுடன் மாப்பிள்ளை வீடு அமைந்து விட்டது. இதனால் மேற்கொண்டு இந்த சம்பந்தத்தை நல்லபடியாக பேசி முடித்து விட வேண்டும் என்று மீனா மற்றும் முத்து மாப்பிள்ளையை சந்தித்து பேச தயாராகி விட்டார்கள்.

ஆனால் இந்த நேரத்தில் ரோகிணியை டார்ச்சர் பண்ணுவதற்கு PA வந்துவிட்டார். அதுவும் நேரடியாக வித்யாவின் வீட்டிற்கு போய் மிரட்டுகிறார். உடனே வித்யா ரோகினிக்கு போன் பண்ணுகிறார். ஆனால் அந்த போனை விஜயா அட்டென்ட் பண்ணி பேசுகிறார். அப்பொழுது வித்யா உன்னை பார்க்க PA வந்திருக்கிறார் என்று சொல்கிறார்.

உடனே ரோகிணி அந்த போனை புடுங்கி பேச ஆரம்பித்து விடுகிறார். அதே மாதிரி வித்யாவிடம் இருந்து போனை வாங்கி PA பேசுகிறார். நான் கேட்டா பணம் என்ன ஆச்சு உன்னால சீக்கிரம் தர முடியவில்லை என்றால் நீ வாழப்போன வீட்டிற்கு நான் வந்து விடுவேன் என்று மிரட்டுகிறார். ரோகிணி பக்கத்தில் விஜயா இருப்பதால் எதுவும் பேச முடியாமல் அப்பாவின் நண்பர் என்ற அர்த்தத்தில் பேசி சமாளித்து விடுகிறார்.

பிறகு போனை வைத்ததும் விஜயா யார் என்று கேட்கும் பொழுது அப்பாவின் PA என்று பொய் சொல்கிறார். அப்பா இன்னும் ஒரு மாதத்தில் வெளியே வந்து விடுவதாக சொல்கிறார். இப்படி ரோகிணி சொல்லும் பொயெல்லாம் நம்பிக் கொண்டிருக்கும் விஜயா, மொத்தம் உங்க அப்பாவுக்கு எத்தனை கோடி இருக்கும் என்று கேட்கும் பொழுது கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லி விஜயாவின் வாயை அடைத்து விடுகிறார்.

இத்தனை கோடி பணமா என்று ஆச்சரியப்பட்ட விஜயா எதுவும் பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். இதனைத் தொடர்ந்து வித்யா மற்றும் ரோகினி சந்தித்து பேசும் பொழுது இனியும் இந்த PA சும்மா இருக்க மாட்டான். அவன் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அடுத்து என்னுடைய வீட்டிற்கு தான் வந்து விடுவான்.

இதனால் எனக்கு தேவையில்லாமல் பிரச்சினை வந்து விடும் என்று யோசித்து மறுபடியும் சிட்டி இடம் உதவி கேட்கலாம் என வித்தியா மற்றும் ரோகிணி இருவரும் சிட்டியை சந்தித்து பேசுகிறார்கள். அங்கே போனதும் சிட்டி, முத்துவிடம் இருக்கும் வீடியோவை பற்றி கேட்கிறார். அதற்கு ரோகிணி நான் எவ்வளவு முறை முயற்சி எடுத்தும் என்னால் அந்த வீடியோவை எடுக்க முடியவில்லை.

ஆனால் கூடிய சீக்கிரத்தில் நீ கேட்ட வீடியோவை நான் எடுத்துக் கொடுத்து விடுவேன். ஆனால் அதுவரை இந்த PA தொல்லையை சகித்துக் கொள்ள முடியாது. அதனால் நீங்கள் அவனுடைய தொந்தரவு எனக்கு வராதபடி ஏதாவது இப்போ உடனடியாக செய்ய வேண்டும் என்று உதவி கேட்கிறார். உடனே சிட்டி, முத்துவிடம் இருக்கும் வீடியோவை எப்படி எடுக்க வேண்டும் என்று பிளான் போட்டு ரோகினி இடம் கொடுக்கிறார்.

அந்த பிளானில் கூட்டு களவாணியாக ரோகிணி, வித்யா, சிட்டி மூவரும் சேர்ந்து முத்துவுக்கு ஆப்பு வைக்கலாம் என்று திட்டம் போட்டு விட்டார்கள். ஆனால் ரோகிணி போட்ட திட்டத்திற்கு அவருக்கு தான் மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது. அதாவது எப்படியோ முத்துமிடம் இருக்கும் வீடியோவை வெளியிட்டாலும் தற்போது சத்யாவும் முத்துவுக்கும் இருக்கும் ஒற்றுமையில் எந்த விரிசலும் வரப்போவதில்லை.

அதே மாதிரி மீனாவின் தங்கை சீதாவின் கல்யாணம் நின்னு போனாலும் பெரிசாக அந்த குடும்பத்திற்கு பாதிப்பு வராது. ஏனென்றால் சீதா இந்த திருமணத்திற்கு ஒருதலைப்பட்சமாக தான் சம்மதம் கொடுத்திருக்கிறார். ஆனால் முத்துவின் போனில் இருக்கும் வீடியோ எப்படி வெளியே போனது யார் மூலமா போனது என்று நிச்சயம் முத்து கண்டுபிடிக்க இது ஒரு சந்தர்ப்பமாக அமையப் போகிறது.

அதன்படி ரோகிணி தான் இந்த வேலையை பண்ணி இருக்கிறார் என்றும் கண்டுபிடித்து விடுவார். அப்படி என்றால் ரோகிணிக்கும் சிட்டிக்கும் என்ன ஒரு சம்பந்தம் என்று ஒவ்வொரு விஷயங்களாக முத்து நோண்ட நோண்ட ரோகிணியின் உண்மையான ரகசியம் என்னவென்று அனைவருக்கும் தெரியவரும்.

- Advertisement -

Trending News