Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவுக்கும் மீனாவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி கணவன் மனைவிக்குள் இருக்கும் ஒற்றுமையும், காதலையும் உணர்த்தும் வகையில் மீனா டாப் கியரில் ரொமான்ஸை தெறிக்க விடுகிறார்.
அதாவது மீனா கஷ்டப்பட்டு இரவும் பகலும் உழைத்த பணத்தை வைத்து முத்துவுக்கு ஒரு காரை வாங்கிக் கொடுக்கணும் என்று முடிவு பண்ணி விட்டார். இதை முத்துவின் நண்பர் மூலம் நிறைவேற்றினார். பிறகு முத்துவை கோவிலுக்கு கூட்டிட்டு வந்த மீனா, அங்கு வைத்து எதிர்பார்க்காத அளவிற்கு காரை முத்துவிடம் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணிவிட்டார்.
முத்து காரைப் பார்த்த சந்தோசம் மற்றும் மீனா வைத்த பாசம் இரண்டையும் நினைத்து புல்லரித்து போய் ஓவர் சந்தோஷத்துக்கு போய்விட்டார். பிறகு இருவரும் காரில் ஏறிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோரையும் வெளியே வரவழைத்து காரை காட்டுகிறார்.
அண்ணாமலை எப்படி வாங்கினாய் என்று கேட்கும் போது மீனா தான் எனக்கு வாங்கிக் கொடுத்தார் என்று முத்து பெருமையாக சொல்கிறார். உடனே விஜயா இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே என்று குத்தி காட்டி பேசுகிறார்.
ரோகினிக்கு விஜயா கொடுக்கும் டார்ச்சர்
அதற்கு முத்து நான் கஷ்டப்படக்கூடாது என்று என் மனைவி உழைத்த காசை வைத்து எனக்காக ஒரு காரை வாங்கி கொடுத்து இருக்கிறார். ஆனால் உங்க மருமகள் ரோகிணி நினைச்சா அவங்க அப்பாகிட்ட சொல்லி 10 லட்ச ரூபாய் ஏற்பாடு பண்ணி மனோஜ் பிசினஸ்க்கு உதவி பண்ண முடியும்.
ஆனால் அதை ரோகிணி செய்யவில்லை என்று முத்து வெளிப்படையாக சொல்லிவிட்டார். இதை கேட்டதும் விஜயா, ரோகிணியை பார்த்து முறைக்கிறார். உடனே ரோகிணி எதுக்கெடுத்தாலும் மாமியாரும் முத்துவும் என் பக்கமே வருகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.
அத்துடன் முத்துவும் மீனாவும் ஒற்றுமையாக இந்த வீட்டில் இருந்தால் நமக்கு தான் பிரச்சனை. இவர்களை கூடிய சீக்கிரத்தில் பிரித்து வெளியே அனுப்ப வேண்டும் என்று மனதுக்குள்ளே பிளான் பண்ண ஆரம்பித்து விட்டார்.
இந்த ஒரு விஷயத்தை வைத்து விஜயா தொடர்ந்து ரோகிணிக்கு டார்ச்சர் கொடுக்கப் போகிறார். இந்த டார்ச்ரை தாங்க முடியாமல் ரோகிணி விபரீதமான ஒரு முடிவை எடுத்து குடும்பத்துக்குள் ஒரு பிரச்சினையை கண்டிப்பாக உருவாக்கப் போகிறார்.
ஆனால் என்ன ஆனாலும் முத்துவும் மீனாவும் ஒற்றுமையாக இருந்தால்தான் இந்த நாடகம் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.