ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

எரிகிற நெருப்பில் குளிர் காயும் ரோகிணி.. சுருதியை சமாதானப்படுத்தும் விஜயா, வெளியேறும் முத்து மீனா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஸ்ருதியின் அம்மாவும், ரோகினியும் நடக்கப்படும் பங்க்ஷனில் எதையாவது சதி வேலை பார்த்து முத்துவை சிக்க வைக்க வைக்கும் என்று பல வழிகளில் முயற்சி செய்தார்கள்.

ஆனால் எதற்குமே அசரத முத்து, அப்பாவின் பேச்சுக்கும் மீனாவின் பாசத்துக்கும் கட்டுப்பட்டு அமைதியாகவே இருந்தார். இதற்கு இடையில் ரோகிணி அப்பா இந்த ஃபங்ஷனுக்கு வரவில்லை என்று விஜயா மொத்த கோபத்தையும் காட்டி ரோகிணியை சீண்டிப் பார்க்கிறார்.

இதெல்லாம் ரோகினிக்கு தேவைதான் என்று சந்தோஷப்படும் நேரத்தில் முத்துவுக்கு வேறொரு விதத்தில் பிரச்சனை வந்து விடுகிறது. அதாவது ஸ்ருதியின் அப்பா, மீனா மீது திருட்டுப் பழியை போட்டு விடுகிறார். இதை பார்த்து விஜயாவும் எதுவும் சொல்லாமல் வாய மூடிட்டு இருக்கிறார்.

இதனால் மீனாவுக்கு என்னவென்று சொல்ல முடியாமல் முத்துவிடம் அழுதுகிட்டே ஓடி வந்து விட்டார். மீனா அழுகையைப் பார்த்ததும் அண்ணாமலை மற்றும் முத்துவும் என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள். மீனா சொல்வதற்கு முன் சுருதி அப்பா அனைவரது முன்னாடியும் நகையே திருடின திருடி என்று மீனா மீது பழி சுமத்தி விட்டார்.

ஸ்ருதியை விட்டுக் கொடுக்காத விஜயா

இதை கேட்டா அண்ணாமலையும் முத்துவும் ஆரம்பத்தில் பொறுமையாக தான் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கடைசிவரை மீனா சொல்வதை நம்பாததால் சுருதி அப்பா திருடி என்று சொல்லிவிட்டார். கோபப்பட்ட முத்து, ஸ்ருதி அப்பாவை அடிக்கிறார்.

இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாத சுருதியும் ரவியும் உள்ளே வந்த பிறகு அவர்கள் கண் முன்னாடி முத்து, அடிக்கிறதை மட்டும் சுருதி பார்த்து விடுகிறார். பிறகு என்ன நடந்திருந்தாலும் முத்து பண்ணினது தான் தப்பு. அவர் இருக்கும் அந்த வீட்டிற்கு நான் வரமாட்டேன் என்று ஸ்ருதி சொல்லி விடுகிறார்.

இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்பதற்கு ஏற்ப ஸ்ருதியின் அம்மா அப்பா சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் விஜயா பணக்கார மருமகளை விட்டுக் கொடுக்க மாட்டார். அந்த வகையில் சுருதியிடம் முத்துவும் மீனாவும் அந்த வீட்டில் இருக்க மாட்டார்கள் நீ என்னுடன் வா என்று கூட்டிட்டு போகப் போகிறார்.

இதனைத் தொடர்ந்து மீனாவையும் முத்துவையும் வெளியே அனுப்புவதற்கு ரோகினிக்கும் விஜயாவுக்கும் கிடைத்த ஒரு வாய்ப்பாக மாறப்போகிறது. இதில் அண்ணாமலை எடுக்கப் போகும் முடிவு என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News