பல கோடி செலவு செய்தும் கல்லா கட்ட முடியாத மாதவன்.. தற்போது வரை உள்ள வசூல் விவரம்

ஒரு நடிகராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் மாதவன் தற்போது தயாரிப்பாளராக, இயக்குனராக ராக்கெட்ரி திரைப்படத்தை கொடுத்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக மாதவன் பல கோடி செலவு செய்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் வசூல் ஒன்றும் அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்று கூறப்படுகிறது.

படத்தில் சயின்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருந்ததும் சாமானிய மக்களை கவராததற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் படம் வெளிவருவதற்கு முன்பே இந்த திரைப்படத்தின் நிஜ ஹீரோவான நம்பி நாராயணன் வெளிப்படையாக பல பேட்டிகளை கொடுத்தார்.

அதுவும் ரசிகர்களுக்கு திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை குறைய செய்துவிட்டது. அது மட்டுமல்லாமல் மாதவனுக்கு முன்பு இருந்த அளவுக்கு பிரபலம் இப்போது இல்லாததும் ஒரு காரணம். இதெல்லாம் சேர்ந்துதான் தற்போது ராக்கெட்ரி திரைப்படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியிருந்த இந்த படத்தின் முதல் நாள் வசூல் ஒரு கோடியை தான் நெருங்கியுள்ளது. படத்தின் பட்ஜெட்டை பொருத்தவரையில் இது மிகவும் குறைவான ஓபனிங் தான். அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்றய வசூலும் அதே நிலையில் தான் இருந்தது.

இதனால் படம் வெளியான இந்த இரண்டு நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இரண்டு கோடியை மட்டுமே நெருங்கியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாளான இன்று இந்த வசூல் சற்று அதிகரித்தாலும், அடுத்தடுத்த நாட்களில் இது இன்னும் அதிகரித்தால் தான் மாதவனுக்கு நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. அந்த வகையில் ராக்கெட்ரியின் கலெக்ஷன் தற்போது மந்த நிலையில் இருக்கிறது.

Next Story

- Advertisement -