சாவின் விளிம்பிற்கு சென்று கம் பேக் கொடுத்த ரோபோ சங்கர்.. வைரலாகும் ஒர்க்அவுட் புகைப்படம்

Comedian Robo Shankar: தன் ஸ்டண்ட் அப் காமெடி மூலம் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்தவர் ரோபோ சங்கர். மேலும் நகைச்சுவையாலும், மிமிக்ரியாலும் மக்களின் பேராதரவை பெற்றவர். இந்நிலையில் இவரின் உடல்நிலை குறித்து வெளியான செய்தி இவரை புரட்டிப் போட செய்தது.

சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார். அவ்வாறு நல்லா போய்க்கொண்டிருந்த இவர் வாழ்க்கையில் திடீரென்று ஏற்பட்ட மாற்றம் இவரை நிலைகுலைய செய்தது. மது அருந்தும் பழக்கம் இருப்பதால், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார்.

Also Read: பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு.. லியோவுக்கு பதிலடி கொடுத்த முத்துவேல் பாண்டியன்

இனி அவ்வளவுதான் இவரின் கதை முடிந்து விட்டது என நெகட்டிவ் வாய் பேசி வந்த நபர்களுக்கு மூக்குடைப்பது போல தற்பொழுது இவரின் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. படப்பிடிப்பின் போது தொடர் வயிற்றுப்போக்கால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார் ரோபோ சங்கர்.

அதைத் தொடர்ந்து தற்போது அதிலிருந்து மீண்டு வரும் இவர் தன்னை பாசிட்டிவாக வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் வீடியோக்களும், பேச்சுக்களும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. பல பிரபலங்களின் உபசரிப்புக்கு ஆளாகினார். தற்பொழுது இவரின் மகளின் திருமணம் குறித்து பேச்சு வர தொடங்கியது.

Also Read: கோழி குருடானாலும் கொழம்பு ருசி தான்.. அம்மா நடிகையை பதம் பார்த்த முரட்டு நடிகர்

அந்த தெம்பில் இந்த ஆட்டமோ என்னவோ என பேசும் விதமாய், தன் உடல் நிலையில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். இவரின் இத்தகைய போட்டோ நான் மீண்டும் வந்துட்டேன் என கூறுவது போல இருந்து வருகிறது. இவை அனைத்தும் தன் மனைவியின் சப்போர்ட்டில் தான் நிறைவேறியது எனவும் கூறி வருகிறார்.

ரோபோ சங்கரின் கம் பேக் வீடியோ

robo-shankar
robo-shankar

யூட்யூபில் இவர் தன் மனைவியுடன் இணைந்து நடனம் ஆடும் வீடியோக்களும் வெளியானது. உடல்நிலை குறித்து அனைவரும் விசாரித்து, தன் மீது பரிதாபப்படுவதை விரும்பாது தன் அடுத்த கட்ட வாய்ப்புகளை மேற்கொள்ள ரெடியாகி வருகிறார் ரோபோ சங்கர்.

Also Read: ஒரே நாளில் ரிலீஸாகி வெள்ளிவிழா கண்ட 3 படங்கள்.. ரஜினி, கமலை பீதி அடைய வைத்த நாயகன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்