6 மாதமாக ரோபோ சங்கருக்கு இருந்த பிரச்சனை.. சீக்ரெட்டாக நடந்த ட்ரீட்மெண்ட்

கடந்த சில நாட்களாகவே ரோபோ சங்கருக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்விகள் தான் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் பாடி பில்டர் போன்று இருந்த அவர் சமீபத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார். அதில் அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் எலும்பும் தோலுமாக காட்சியளித்தார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு உடம்பில் ஏதோ மிகப்பெரிய பிரச்சனை என்று செய்திகள் வெளிவந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த அவருடைய குடும்பத்தினர் ரோபோ சங்கர் நலமாக தான் இருக்கிறார் என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். மேலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் அவருடன் இணைந்து இருக்கும் போட்டோ, வீடியோக்கள் ஆகியவற்றையும் அவரின் மனைவி வெளியிட்டு வந்தார்.

Also read: புத்தாண்டில் ஷாக் கொடுத்த ரோபோ சங்கர்.. விஜயகாந்த் போல மெலிந்து போன புகைப்படம்

ஆனாலும் ரோபோ சங்கருக்கு உடலளவில் ஏதோ பிரச்சினை இருப்பது நமக்கு தெளிவாகவே தெரிந்தது. ஏனென்றால் அதில் அவர் முகமே களை இழந்து போயிருந்தது. வழக்கமாக இது போன்ற போட்டோ, வீடியோக்களில் அவர் ஒரு துள்ளலுடன் காணப்படுவார். ஆனால் அவர் மனைவி வெளியிட்டு வரும் அந்த வீடியோக்களில் அவர் கஷ்டப்பட்டு இயல்பாக இருக்க முயல்வது அப்பட்டமாக தெரிந்தது.

அதை வெளிப்படையாகவே கமெண்ட் செய்த ரசிகர்கள் விரைவில் அவர் குணமாக வேண்டும் என்றும் கூறி வந்தனர். இந்நிலையில் ரோபோ சங்கர் கடந்த ஆறு மாத காலமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதாவது வெளிநாட்டுக்கு ஷூட்டிங் சென்ற இடத்தில் அவருக்கு வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கிறது.

Also read: பஞ்சத்துல அடிபட்ட மாதிரி மாறிய ரோபோ சங்கர்.. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே

அதைத்தொடர்ந்து சில பிரச்சினைகளும் ஏற்படவே அவர் மருத்துவரை நாடி இருக்கிறார். அப்போதுதான் அவருக்கு ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதை தொடர்ந்து அவருக்கான ட்ரீட்மென்ட் சத்தமில்லாமல் நடந்திருக்கிறது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் சில மாதங்களில் பூரண நலம் பெற்று விடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் தெரிந்தோ, தெரியாமலோ அவர் சில மாதங்களாக அசைவம் சாப்பிடுவது, குடிப்பது ஆகியவற்றை நிறுத்தி இருக்கிறார். அதுதான் அவர் தற்போது விரைவில் குணமடையவும் உதவி இருக்கிறது. அந்த வகையில் ரோபோ சங்கரின் உடல் நிலையை கேள்விப்பட்ட அனைவரும் அவர் பழைய மாதிரி துள்ளலோடு எழுந்து வர வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

Also read: எலும்பும், தோலுமாய் மாறிய ரோபோ சங்கர், காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த மனைவி!

- Advertisement -