Tamil Cinema News | சினிமா செய்திகள்
புத்தாண்டில் ஷாக் கொடுத்த ரோபோ சங்கர்.. விஜயகாந்த் போல மெலிந்து போன புகைப்படம்
விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரோபோ சங்கர் இப்போது வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அதாவது பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருக்கும் ரோபோ ஷங்கர் திடீரென மெலிந்து காணப்பட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆச்சு என்று கேள்வி கேட்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு அரிய வகை நோய் இருப்பதாகவும், அதனால் உடல் எடை குறைந்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
Also read: பிரபல நடிகையை உருகி உருகி காதலித்த கேப்டன்.. அதே மாதிரியே பெண்ணை திருமணம் செய்து வைத்த ராவுத்தர்
இந்த செய்தி இணையத்தில் பூதாகரமாக வெடிக்க ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா ரோபோ சங்கர் இது குறித்து பேசினார். அதாவது ஒரு வருடமாகவே ரோபோ சங்கர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருவதாக அவர் கூறியிருந்தார். மேலும் ரோபோ சங்கர் நடிக்கும் படத்திற்காக உடல் எடையை குறைத்து வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரபலங்கள் தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர். அதன்படி ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதில் ரோபோ ஷங்கர் முன்பு இருந்ததை விட மேலும் மெலிந்த இப்போது இருக்கும் விஜயகாந்தை போல் உருமாறி இருந்தார்.
அதாவது விஜயகாந்த் உடலில் பல பிரச்சனைகள் உள்ளதால் இப்போது ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து விட்டார். இதற்காக இப்போது பல சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறார். இதேபோல் ரோபோ ஷங்கரும் தற்போது சரமாரியாக உடல் எடை குறைத்து உள்ளார். இது ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
உடல் எடையை குறைத்த ரோபோ சங்கர்

robo-shankar
ஆனால் ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகள் இருவருமே அவரின் அடுத்த படத்திற்காக தான் உடல் எடையை திடீரென குறைத்துள்ளார் என கூறி வருகிறார்கள். இருந்தாலும் ரோபோ ஷங்கரின் இந்த நிலையை பார்த்து அவரது ரசிகர்கள் வருத்தத்துடன் தான் இருக்கிறார்கள். அப்படி எந்த படத்தில் தான் ரோபோ சங்கர் இப்படி நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
Also read: காமெடி நடிகருக்காக 15 பேரை அடித்து விரட்டிய விஜயகாந்த்.. சவுக்கு தோப்பில் கேப்டன் செய்த அட்டூழியம்
