காந்தாரா பட வெற்றியால் தலைகால் புரியாமல் ஆடும் ரிஷப் ஷெட்டி.. பட வாய்ப்பை நிராகரித்து ஆணவப் பேச்சு

சமீபத்தில் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த வெளியான இப்படத்தை கே ஜி எஃப் படத்தை தயாரித்தார் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கன்னட சினிமாவில் மாபெரும் வரவேற்பு பெற்றவுடன் மற்ற மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. எல்லா மொழிகளிலுமே காந்தாரா படத்திற்கு ஏகபோக வரவேற்பை கிடைத்தது. இப்போது வரை கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.

Also Read : காந்தாராவை தூக்கி சாப்பிட வரும் மறைக்கப்பட்ட வரலாறு.. விக்ரமை பார்த்து பார்த்து செதுக்கும் பா ரஞ்சித்

இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல பிரபலங்கள் ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் நடிகர் ரிஷப் ஷெட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை இவர் நிராகரித்துள்ளார்.

அதாவது காந்தாரா பட வெற்றியால் ஹிந்தியிலும் இப்படம் வெளியானது. அங்கு கிட்டத்தட்ட 62 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்ததால் ரசிகர்கள் மத்தியில் ரிஷப் ஷெட்டிக்கு ஆதரவு கிடைத்து. இதனால் இவரை வைத்து படம் இயக்க பாலிவுட் இயக்குனர்கள் முன்வந்துள்ளனர்.

Also Read : அடேங்கப்பா! பொன்னியின் செல்வன் வசூலை மெர்சலாக்கிய காந்தாரா.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆனால் நான் ஒரு கன்னடர், நேரடியாக பாலிவுட் படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. அதுமட்டுமன்றி கன்னடா மக்களால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். ஒரு படத்தில் நடித்த வெற்றி பெற்றால் உடனே எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் மாறிவிட மாட்டார்கள்.

அதேபோல் நானும் எனது கன்னட சினிமாவை எப்போதுமே விட்டுக் கொடுக்க மாட்டேன் என ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். மேலும் எனது மக்கள் விரும்பினால் எனது படத்தை ஹிந்தியில் டப் செய்து வெளியிடுவேன் என ரிஷப்பின் ஆணவ பேச்சு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டால் கிடைக்கும் வருமானம் வேண்டும், ஆனால் பட வாய்ப்பு மட்டும் வேண்டாமா என பலரும் ரிஷப் ஷெட்டியை விமர்சித்து வருகிறார்கள்.

Also Read : சின்ன கல்லு பெத்த லாபம், கம்மி பட்ஜெட்டில் பல கோடி லாபம் பார்த்த காந்தாரா.. 6 மடங்கு அள்ளிய தயாரிப்பாளர்

Next Story

- Advertisement -