சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

Joe Movie Review – காதலியின் மரணம், கட்டாய திருமணம்.. ரியோவின் ஜோ எப்படி இருக்கு?

Joe Movie Review: விஜய் டிவியின் பிரபலங்கள் வெள்ளித்திரையில் ஜொலிப்பது உண்டு. அந்த வகையில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்த ரியோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் அவரது நடிப்பில் ஜோ என்ற படம் வெளியாகி இருக்கிறது. ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரியோக்கு ஜோடியாக மாளவிகா மற்றும் பவ்யா நடித்திருந்தனர். ரியோ கல்லூரி படிக்கும் போது தன்னுடன் படித்த சக மாணவியான மாளவிகாவை காதலிக்கிறார். அதன் பிறகு மாளவிகாவும் இவரை காதலிக்க தொடங்குகிறார்.

இந்த சூழலில் மாளவிகா தனது சொந்த ஊருக்கு செல்லும்போது இவருடைய வீட்டுக்கு தெரிந்ததால் பிரச்சனை வெடிக்கிறது. இதனால் வேறு வழி இல்லாமல் மாளவிகா தற்கொலை செய்து இறந்து விடுகிறார். இந்த துக்கம் தாளாமல் ரியோ மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்.

Also Read : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்யும் அட்டூழியங்கள்.. ஆண்டவரே உங்க அரசியலை எங்க கிட்ட காட்டுறீங்களே!

இதை அடுத்து ரியோவின் நிலையை பார்த்துவிட்டு அவரது பெற்றோர் அவருக்கு பவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. ஆனால் முன்பு ரியோ செய்த ஒரு உதவியால் அவரது வாழ்க்கை அப்படியே மாறுகிறது.

இவ்வாறு காதலின் மரணம், கட்டாய திருமணம் என்று படம் போனாலும் முழுக்க முழுக்க காதல் கலந்த படமாக தான் ஜோ படம் இருந்தது. ரியோவின் நடிப்பும் அபாரமாக இருந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை பார்த்த அனுபவம் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ரியாவுக்கு ஜோ படம் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.25/5

- Advertisement -

Trending News