விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல்அறிமுகமானவர் தான் ரியோ ராஜ். அதன்பிறகு சத்ரியன் எனும் படத்தில் விக்ரம் பிரபுவிற்க்கு நண்பனாக நடித்திருப்பார்.
இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா. இப்படம் பெரிய அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும் ரியோ ராஜியின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக உள்ளது.
சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வர வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டுள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்டதிலிருந்து ரியோ ராஜின் உண்மையான சுயரூபம் வெளியாகி வருகிறது.
தொடர்ந்து சண்டை சச்சரவு என தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் ரியோ ராஜூக்கு சமூகவலைதளத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர், ரியோ ராஜின் மனைவியிடம் உங்கள் கணவர் கோமாளியாக செயல்படுகிறார் என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு ஸ்ருதிரவி, கோமாளி என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கோமாளி என்பது பலரையும் சிரிக்க வைக்கக்கூடிய நபர் என்றும், தன் எதிரே இருப்பவர்களை சிரிக்க வைத்து பார்ப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை எனவும் நீங்கள் சொல்லுவதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் ரியோ ராஜ் என்டர்டைன்மென்ட் ஆகத்தான் பார்க்கிறீர்கள். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது எனமறைமுகமாக அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.