லோகேஷுக்கு மட்டும்தான் மாலை மரியாதையா.? மதிக்காமல் ஓரங்கட்டப்படும் இயக்குனர்

Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போதைய தமிழ் சினிமாவின் சென்சேஷனல் படைப்பாளியாக இருக்கிறார். இவருடைய ஒவ்வொரு நகர்வும் தமிழ் சினிமா பிரபலங்களாலும், மீடியாக்களாலும் உற்று கவனிக்கப்படுகிறது. இதற்கு காரணம் இவருடைய முந்தைய படங்களின் அபாரமான வெற்றி தான். இருந்தாலும் சமீப காலமாக இவருக்கு கொடுக்கப்படும் வரவேற்பு கொஞ்சம் எல்லை மீறி போகிறதோ என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அவருடைய அடுத்த ப்ராஜெக்ட் தலைவர் 171 பற்றிய அப்டேட் வெளியாகிவிட்டது. லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி எப்பொழுது உருவாகும் என ரசிகர்கள் கடந்த இரண்டு வருடங்களாகவே காத்திருந்தார்கள்.

Also Read:உதவி இயக்குனர்களை தங்கத்தட்டில் வைத்து தாங்கும் லோகேஷ்.. ராஜமௌலி கூட செய்யாத செயல்

தலைவர் 171 அப்டேட்டுகள் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் இந்த படத்தைப் பற்றிய பேச்சுக்கள் தான். வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க இருந்தாலும், இப்போது இந்த படத்திற்கான அலப்பறைகளை ஆரம்பித்து விட்டார்கள் ரஜினியின் ரசிகர்கள். இதனால் வேறொரு இயக்குனர் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்.

ரஜினி, லோகேஷ் கனகராஜ் உடன் இணைவது அவருடைய 171 வது படத்தில். இதற்கிடையில் ரஜினி தன்னுடைய 170 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இந்த படத்தைப் பற்றி பேச்சு மூச்சு கூட வெளிவருவதில்லை. உண்மையை சொல்லப்போனால் இந்த படத்தை பற்றி பேச மீடியாக்கள் கூட ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்.

Also Read:லியோ சென்சாரில் தப்பித்தாலும் அவன்ட உங்க பருப்பு வேகாது.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட லோகேஷ்

இத்தனைக்கும் தலைவர் 170 படத்தை இயக்க இருப்பது இயக்குனர் ஞானவேல். இவர் ஏற்கனவே சூர்யா மற்றும் மணிகண்டனை வைத்து ஜெய் பீம் என்னும் உணர்வுபூர்வமான படத்தை இயக்கியவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் பண்ண இருந்தும் இவரைப் பற்றியும், இவர் இயக்க இருக்கும் அந்த படத்தைப் பற்றியும் யாருமே பேசவில்லை.

எந்த பக்கம் திரும்பினாலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் தலைவர் 171 பற்றி தான் வைரலாக பேச்சுக்கள் போய்க் கொண்டிருக்கிறது. எளியவன் சொல் அம்பலம் ஏறாது என்ற கதையில் தலைவர் 170 பற்றி ரஜினிகாந்த் கூட எந்த மீடியா முன்பும் பேசாமல் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

Also Read:ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்க கூடாது.. தந்திரமாய் காய் நகர்த்தும் ரெட் ஜெயண்ட் உதயநிதி

Next Story

- Advertisement -