தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட செய்துதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அவர் யார் என்பதை பற்றி பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தவர் தான் ரேகா. அன்றைய காலகட்டத்தில் பல நடிகர்களுடன் இவர் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
என்னதான் வெற்றி படங்கள் கொடுத்தாலும் ரசிகர்கள் ஒரு சில நடிகைகள் மட்டுமே ஞாபகம் வைத்து இருப்பார்கள் அப்படி ஒரு காலத்தில் அனைத்து ரசிகர்களிடமும் மனதில் குடியிருந்தார்.
காலப்போக்கில் மற்றவர்களுக்கு நடப்பது போலவே இருக்கும் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கின அதனால் சினிமாவை தாண்டி மற்ற தொழில்துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அனைத்து நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார் ரஜினிகாந்துடன் மட்டும் எந்த ஒரு படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை.
ரேகா ஒரு காலத்தில் பிஸியாக நடிக்கக்கூடிய நடிகையாக இருந்தார் அப்போது இவருக்கு 45 நாட்கள் ரஜினியுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இவர் மற்றொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது.
ஆனால் அண்ணாமலை படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ரேகா நடித்திருப்பார். அதன் பிறகு தற்போது வரை ரஜினியுடன் இவர் எந்த ஒரு படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் ஒரு சில முட்டாள்தனமான ரசிகர்கள் தற்போது ரஜினியின் சினிமா உயரத்தை வைத்து ரேகை விமர்சனம் செய்து வருகின்றனர்.
உண்மையாக கூறப்போனால் ரேகா ரஜினியுடன் நடிக்க முடியாது என கூறவில்லை அவருடன் நடிப்பதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை அமையவில்லை இந்த மாதிரி ரஜினிக்கும் சில நடிகைகளுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமைந்தும் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க முடியாமல் போயிருக்கும் என்பதை மற்ற ரசிகர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.