Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ்நாட்டில் இருந்து, வந்துபோற கடைசி உயிர் என்னோட தான் இருக்கணும்.. பதைபதைக்க வைத்த ரெட் சாண்டல்வுட் டிரைலர் வீடியோ

ரெட் சாண்டில் வுட் படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

res sandlewood

Red Sandal Wood Movie Trailer: வரும் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் தான் ரெட் சாண்டில் வுட். ஆந்திராவில் கூலித்தொழிலாளியாக செல்லக்கூடிய தமிழர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதாக, கைது செய்து அவர்களின் உயிர் போவதை குறித்த கதை அம்சம் கொண்ட படம் தான் ரெட் சாண்டில் வுட்.

இந்த படத்தை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்திருக்கிறது. எட்டு தோட்டாக்கள், ஜீவி, பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் குரு ராமானுஜம் இயக்கியிருக்கிறார்.

Also Read: வில்லனா இருந்த உன்ன ஹீரோவா ஆக்கினது தப்பா போச்சு.. இமேஜ் பார்க்கும் சரத்குமார், புலம்பி தவிக்கும் தயாரிப்பாளர்

இந்த படத்தில் வெற்றியுடன் மயூரி, கேஜிஎப் ராம், எம் எஸ் பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், எதிர்நீச்சல் மாரிமுத்து உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தமிழகத்திலிருந்து ஆந்திரா செல்லும் கூலி தொழிலாளிகள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் செம்மரங்களை கடத்திய கும்பல்களின் பிடியில் சிக்கி தமிழர்களின் போராட்டத்தை காட்டி இருக்கிறது.

இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் கவின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. அடுத்த மாதம் 8ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது.

Also Read: சிங்கமோ, திமிங்கலமோ வேட்டைக்காரன பார்த்து தான் மிருகங்கள் பயப்படனும்.. சைக்கோ வேட்டையில் சரத்குமாரின் ஹிட்லிஸ்ட் டீசர்

இந்த படத்தின் டிரைலரை பார்த்த பிறகு ரசிகர்கள் பலரும் நடிகர் வெற்றியின் அடுத்த வெற்றிப் படம் இதுதான் என்று அடித்து சொல்கின்றனர். அந்த அளவிற்கு சமீப காலமாகவே வித்தியாச வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகும் தரமான படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ரெட் சாண்டில்வுட் படமும் போர் தொழில், குட் நைட் போன்ற படங்களின் வரிசையில் சற்றும் எதிர்பாராத வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டிரைலரை பார்த்த பிறகு ரெட் சாண்டில் வுட் படத்தை திரையில் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ரெட் சாண்டல் வுட் டிரைலர் வீடியோ இதோ!

Also Read: போர் தொழிலுக்கு பிறகு வேட்டையாடத் தொடங்கிய சரத்குமார்.. நடுங்க வைக்கும் பரம்பொருள் ட்ரெய்லர்

Continue Reading
To Top