பாண்டியன் ஸ்டோர் தனத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.. கவர்னர் கையால் கிடைத்த விருது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. தற்போது உள்ள நவீன காலத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என உட்கார்ந்து பேச கூட நேரம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை சொல்லும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இத்தொடரில் ஆணிவேராக உள்ள கதாபாத்திரம் மூர்த்தியின் மனைவி தனம். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை இந்த அளவுக்கு முன்னேறியதற்கு முக்கிய பங்கு தனத்திற்கு உண்டு. இந்நிலையில் அந்த தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

இவர் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகி ரஜினி, அஜித், மாதவன், மம்முட்டி, நாகர்ஜூன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதை தொடர்ந்து கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தமிழில் பாண்டியன் ஸ்டோர்ஸ் போல இத்தொடரின் தெலுங்கு வெர்ஷன் ஆன வதினம்மா தொடரிலும் சுஜிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இத்தொடர் சமீபத்தில் நிறைவடைந்த உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சுஜிதா தற்போது விருது வாங்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது மாண்புமிகு மகளிர்க்கான விருதுகளில் சிறந்த முன்னுதாரணமான நடிகைக்கான விருதை சுஜிதா தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கைகளால் பெற்றுள்ளார். அதில் தன்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது என பதிவிட்டு இருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சின்னத்திரையில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வரும் சுஜிதா யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு பல நல்ல கருத்துக்களையும் சொல்லி வருகிறார். மேலும் விளம்பரங்கள் இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு தன்னை மெருகேற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சுஜிதா.

Sujitha
Sujitha