புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இந்தியன்-2 வில் சுகன்யா வேண்டவே வேண்டாம்.. பெரிய தலையால் விரட்டப்பட்ட ஷங்கர்

கடந்த 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல், சுகன்யா, மனிஷா கொய்ராலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் இந்தியன். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பினால் இப்போது மீண்டும் ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

மேலும் கமலும் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். ஆனால் ஷங்கர் இந்த படத்தில் சுகன்யா வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். ஏனென்றால் எல்லாம் இந்தியன் முதல் படத்தில் வந்த பிரச்சனை தான் காரணமாம். அதாவது முதலில் இந்தப் படத்திற்கான முழு கதையையும் சுகன்யாவிடம் ஷங்கர் கூறியிருக்கிறார்.

Also Read : 50 வருடங்களாக ஆட்டி படைத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலையா.. கமல், அஜித்தை வளர்த்துவிட்டும் பிரயோஜனம் இல்ல

அப்போதே படத்தில் ஆடையின்றி நடிப்பது போல ஒரு காட்சி ஷங்கர் சுகன்யாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவரும் சரி என சொன்னாராம். அதன் பிறகு இடைப்பட்ட காலத்தில் அரசியல் பிரபலம் ஒருவருடன் சுகன்யா லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார்.

மேலும் தனக்கு பெரிய இடத்தில் செல்வாக்கு இருப்பதாக நினைத்துக் கொண்ட சுகன்யா அதன் பிறகு இந்தியன் படத்தில் ஆடையின்றி நடிக்க முடியாது என கூறியுள்ளார். இதற்கு ஷங்கர் ஆரம்பத்திலேயே இதற்கு ஒற்றுக்கொண்டுதானே படத்தில் நடிக்க வந்தீர்கள். இப்படி சொன்னால் என்ன செய்வது என கேட்டுள்ளார்.

Also Read : கமல் சொந்த குரலில் பாடி மெய்சிலிர்க்க வைத்த 6 பாடல்கள்.. பத்தல பத்தல என குத்தாட்டம் போட்ட ஆண்டவர்

அதற்கு அப்படித்தான் பண்ணுவேன் என திமிராக சுகன்யா கூறியிருந்தாராம். இப்படியே வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் முற்றிப்போய் உள்ளது. மேலும் அந்தப் பெரிய இடத்து செல்வாக்கில் இருந்து ஷங்கருக்கு குடைச்சலும் வந்துள்ளது. ஷங்கர் வேறு வழியில்லாமல் அந்த காட்சியை மட்டும் டூப் வைத்து எடுத்திருந்தார்.

ஆனாலும் இந்த காட்சியில் நான் நடித்தது போல தான் மக்கள் நினைப்பார்கள் என்று சுகன்யா கூறி ஷங்கர் மீது புகார் அளித்திருந்தார். இதனால் வெறுத்துப் போன ஷங்கர் அதிலிருந்து சுகன்யாவை தனது படங்களில் நடிக்க வைக்க விரும்புவதில்லை. அதனால் தான் இந்தியன் 2 படத்திலும் சுகன்யா நடிக்கவில்லை.

Also Read : ஆப்பிரிக்காவில் மெர்சல் பண்ணும் ஷங்கர்.. தயாரிப்பாளர் காசுக்கு கேரண்டி கிடைக்குமா?

- Advertisement -

Trending News