கழுத்தை நெரித்த கடன்.. வழியில்லாமல் சன் பிக்சர்ஸின் கை பொம்மையாக மாறிய சிவகார்த்திகேயன்

சன் பிக்சர்ஸ் இழுத்த இழுப்புக்கெல்லாம் தற்போது சிவகார்த்திகேயன் வளைந்து கொடுத்து செல்வது கோலிவுட் வட்டாரங்களில் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்துள்ளன.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்த நடிகர்களில் முக்கியமானவராகவும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு ரோல் மாடலாகவும் இருந்து வருபவர் சிவகார்த்திகேயன்.

திறமையான மனுஷன் தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் உயர்ந்து கொண்டிருக்கும் போதே அகலக்கால் வைத்து பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். சிவகார்த்திகேயனை பெரிய ஹீரோவாக்கி விட்டதில் அவரது நண்பருமான RD ராஜாவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

24am ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ரெமோ, வேலைக்காரன், சீமராஜா போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தவர், ஆனால் இதில் ரெமோ படத்தை தவிர மற்ற படங்கள் அனைத்துமே சுமாரான வெற்றியைத்தான் பெற்றது.

அதுமட்டுமில்லாமல் கே ஜே ஆர் நிறுவனம் தயாரித்த ஹீரோ படமும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் எப்படியாவது சீக்கிரம் டாப் 3 நடிகர்களில் ஒருவர் ஆகிவிடவேண்டும் என்கிற பேராசை தான் சிவகார்த்திகேயனை இந்த நிலைமைக்கு தள்ளியுள்ளது என்கிறார்கள்.

இந்நிலையில்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இரண்டு வருடங்களில் ஐந்து படங்கள் மற்றும் 75 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி உள்ளதாக கூறுகின்றனர். 75 கோடி சம்பளம் வாங்கினாலும் அது அவரது கடனை கட்டவே சரியாக இருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

22 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு படத்திற்கு வெறும் 15 கோடி கொடுத்து ஓகே பண்ணியுள்ள சன் பிக்சர்ஸின் ராஜதந்திரத்தை கோலிவுட் வட்டாரமே வியந்து பார்க்கிறதாம். மேலும் சன் பிக்சர்ஸ் தவிர வேறு எந்த தயாரிப்பு நிறுவனமும் தற்போது படம் தயாரிக்கும் நிலைமையில் இல்லை என்பதை புரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் நீங்க என்ன சொன்னாலும் செய்ய தயார் என சரணடைந்து விட்டாராம்.

sivakarthikeyan-cinemapettai-01
sivakarthikeyan-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்