ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

முழு படத்திற்கும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர்.. ஆனால் இசைக்கு மட்டுமே கிடைத்த பரிதாபம்

உலக அரங்கில் மிகப்பெரிய விருதான ஆஸ்கர் விருதின் 95 ஆவது விழா நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. மற்ற விருதுகளை காட்டிலும் ஆஸ்கார் விருது என்பது உலக சினிமா ரசிகர்களால் அதிகம் உற்று நோக்கப்படும் ஒன்று. இந்த வருடம் இந்திய சினிமாவுக்கு மொத்தம் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே பெருமையான தருணமாக பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஒரிஜினல் பாட்டுக்கள் பிரிவில் ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் யானை வளர்ப்பவர்களின் வாழ்க்கையை டாக்குமெண்டரி ஆக எடுத்த த எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்னும் குறும்படத்திற்கும் ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.

Also Read:தாயை இழந்த குட்டிகளுக்கு பெற்றோர்களான பொம்மன், பெல்லி.. ஆஸ்கரை தட்டி தூக்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் கதை இதுதான்

கடந்த 2007 ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனரில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்னும் பாடலுக்காக இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் மேடையை அலங்கரித்த பின்பு தற்போது இப்பொழுது இசையமைப்பாளர் கீரவாணி நாட்டுநாட்டு பாடலுக்காக உலக அரங்கில் இந்திய சினிமாவை தலை நிமிர செய்திருக்கிறார்.

இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் மிகப் பெருமையான விஷயம் என்றாலும் ஒரு பக்கம் மிகப்பெரிய ஏமாற்றமும் நடந்திருக்கிறது. அதாவது ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கார் விருது பெரும் என்று அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் அது, இதற்காக இயக்குனர் ராஜமௌலியும் மாத கணக்கில் அங்கு தங்கி வேலைகளை செய்து வந்தார். ஆனால் படத்திற்கான விருது கிடைக்கவில்லை.

Also Read: 2023 ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய ஆர்ஆர்ஆர்.. நினைத்ததை முடித்துக் காட்டிய ராஜமவுலி

பாடலுக்கு அங்கீகாரம் கிடைத்த மேடையில் படம் விருதை பெறவில்லை என்பது அந்த பட குழுவுக்காக இருக்கட்டும், இந்திய சினிமா பிரபலங்களாக இருக்கட்டும், இந்திய சினிமா ரசிகர்களாக இருக்கட்டும் அனைவருக்குமே இது மிகப்பெரிய ஏமாற்றம்தான். மேலும் எதனால் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு கேள்வியாக தான் இருக்கிறது.

இந்தத் திரைப்படம் சுதந்திர இந்தியாவிற்கு முன்னால் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக ஆங்கிலேயர்களை அசிங்கப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது கொடுக்கப்படுவது இல்லை. இதற்கு முன்பாக லகான் என்னும் திரைப்படத்திற்கும் இந்த காரணத்திற்காக தான் ஆஸ்கார் விருது கொடுக்கப்படவில்லை அதேபோல்தான் இயக்குனர் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கும் நடந்திருக்கிறது.

Also Read: என்னோட படத்துல இவரை நடிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை.. ராஜமவுலி விரும்பிய அந்த தமிழ் நடிகர்

- Advertisement -

Trending News